Take a fresh look at your lifestyle.

’சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் விமர்சனம்

80

Casting : Saravanan, Namritha, Aroul D Shankar, Shanmugham, Thiruselvam, Vijayashree, Iniya Ram

Directed By : Balaji Selvaraj

Music By : Vibin Baskar

Produced By : 18 Creators – Sasikala Prabhakaran

சாதாரண நோட்டரியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணி செய்து வரும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்கிறார்.  வழக்கு, வாதம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தின் வெளியே உட்கார்ந்திருக்கும் தன்னிடம் உதவியாளராக சேருவது சரியில்லை, என்று சரவணன் நிராகரிக்கிறார்.

இந்நிலையில் சண்முகம் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்துறையிடம் முறையிட அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், அவரை விரட்டி அடிப்பதால் நீதிமன்ற வளாகத்தில் காணாமல் போன தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழக்கிறார்.

தீக்குளித்து இறந்த அவருக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்ற முடிவுக்கு வரும் வழக்கறிஞர் சரவணன், அந்த சம்பவம் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர்கிறார்.

அதன்படி, தீக்குளித்து உயிரிழந்தவரின் மகள் கடத்தப்பட்டிருப்பதையும், அது பற்றிய புகாரை சம்மந்தப்பட்ட காவல் நிலையம் ஏற்க மறுத்த தகவலையும் சரவணன் நீதிமன்றத்தில் தெரிவித்து, பொதுநலன் வழக்கை ஹேபியஸ் கார்பஸ் வழக்காக பதிவு செய்கிறார். சம்மந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள்.

காவல்துறை கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த பெண்ணை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் சரவணனுக்கு, அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போனதும், தீக்குளித்து உயிரிழந்த அவரது தந்தை நீண்ட நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது  தெரிய வருகிறது. 

முடிவில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எதற்காக தன் மகளுக்காக தீக்குளித்து உயிரிழந்தார்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பொது நல வழக்குக்காக வாதாடும்  சரவணன் இறுதியில் ஜெயித்தாரா?  

காணாமல் போன பெண்ணின் நிலை என்ன?  என்கிற பல கேள்விகளுடன்  அடுத்தடுத்த எபிசோட்கள் பல திருப்பங்களுடன் சொல்லும் வெப் தொடர்தான் ’சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்.

சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், வழக்கறிஞராக கருப்பு அங்கி போட்டு, நீதிமன்றத்தில், இயல்பான உடல் மொழியில் அனுபவ நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்  
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா  துணிச்சலான பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். 
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் ஒளிப்பதிவும்,  இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் இசையும் இந்த தொடருக்கு பக்கபலம்  
விறு விறுப்பான திரைக்கதையில் எதிர்ப்பார்க்கும் திருப்பங்களுடன் கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ்-ன் கதையில் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி  

தொடரை இயக்கியிருக்கிறார  இயக்குனர் பாலாஜி செல்வராஜ்,  

ரேட்டிங் –  3 / 5