Take a fresh look at your lifestyle.

’யாதும் அறியான்’ – விமர்சனம்

98

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் எம்.கோபி இயக்கத்தில் தினேஷ், ஆனந்த் பாண்டி, அப்பு குட்டி, பிரானா, ஷியாமல், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’யாதும் அறியான்’

நாயகன் தினேஷும், நாயகி பிரானாவும்  ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தினேஷ் காதலியுடன் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறார். 

ஒரு கட்டத்தில் நெருக்கமாக இருக்க ஆசைப்படும் தினேஷ் கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு முயற்சிக்க  அதற்கே மறுக்கும் பிரானா திருமணத்திற்கு பிறகே எல்லாம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

தனது ஆசை பற்றி  நண்பரான ஆனந்த் பாண்டியிடம் கூறுகிறார். இதற்கு ஆனந்த் ஒரு யோசனை சொல்கிறார். அவரது யோசனைப்படி, தினேஷ் அவரது காதலி  பிரானாவுடனும் நண்பர் ஆனந்த்  அவரது காதலி ஷியாமல்வுடன் சேர்ந்து  வனப்பகுதியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.

 அந்த விடுதியின் மேலாளராக  அப்புக்குட்டி இருக்கிறார்.

நண்பனின் யோசனைப்படி தனது காதலியுடன் நெருக்கமாக இருக்க  நாயகன் தினேஷ் முயற்சிக்க ஆரம்பத்தில் தினேஷின் முயற்சிக்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் பிரானா, பிறகு அவரது தொடர் முயற்சிக்கு அடிப்பணிந்து அவருடன் இணைந்து விடுகிறார். 

தன்னுடைய ஆசை நிறைவேறியது என்ற சந்தோஷத்தில் தினேஷ் இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே பிரானா இறந்து கிடக்கிறார்.

முடிவில் மர்மமான முறையில் நாயகி பிரானாவை கொலை செய்து யார்?  என்பதை நாயகன் நாயகன் தினேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’யாதும் அறியான்’ 

கதைநாயகனாக நடித்திருக்கும் தினேஷ் அறிமுக படத்திலேயேஇயல்பான நடிப்பில் . படத்தின் முதல் பாதியில் அமைதியாக வருபவர் அடுத்த பாதியில்  வித்தி யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரானா,அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமல், விடுதி மேலாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி, மருத்துவராக வரும் தம்பி ராமையா  என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 

எல்.டி ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .

இயல்பான காதல் கதையை மைய கருவாக வைத்து அதில் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ஜானர் வகையான படத்தை  இயக்கியுள்ளார் இயக்குனர்  எம்.கோபி 

ரேட்டிங் :  3 / 5