Take a fresh look at your lifestyle.

’டிரெண்டிங்’ – விமர்சனம்

90

Ram film factory சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா ஷிவன்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டிரெண்டிங்’

காதலித்து திருமணம் செய்து கொண்ட க லையரசன் – பிரியாலயா தம்பதிகள் அர்ஜுன்மீரா என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்கள் யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பெரிய பங்களா வீடு, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் திடீர் என ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் இன்றி தவிக்கிறார்கள். கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். இச்சமயம் மர்ம நபர் ஒருவர் இவர்களை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் 2 கோடி பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்.

இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் தம்பதி இடையே விளையாடும் இந்த போட்டி அவர்களது வீட்டிலேயே , 7 நாட்கள் விளையாட வேண்டும் என்றும், கொடுக்கும் டாஸ்க்குகளில் வெற்றி பெற்றால் பரிசுத் தொகை உயரும் என்றும் கூறுகிறார்.

4 போட்டிகள் கொண்ட இந்த விளையாட்டில் முதல் இரண்டு போட்டியில் கலையரசன் – பிரியாலயா தம்பதிகள் எளிதாக வெற்றி பெற்று விட மீதி இருக்கும் இரண்டு போட்டியிலும் தொடர்ந்து விளையாட முடிவு எடுக்கிறார்கள்.

இந்நேரத்தில் திடீரென கலையரசன் அண்ணனாக நினைக்கும் பிரேம் குமார் விட்டிற்குள் நுழைய அவரை வைத்து விளையாட மர்ம நபர் ஒரு டாஸ்க் வைக்கிறான் .
முடிவில் கலையரசன் – பிரியாலயா தம்பதிகள் எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று 2 கோடி ரூபாயை கைப்பற்றினார்களா?
வெற்றி பெற்ற பணத்தில் கடன் தொல்லையில் இருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்  ’டிரெண்டிங்’
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன் இயல்பான நடிப்பில் காதல், கோபம், சோகம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா கதையுடன் இணைந்து சிறப்பாக நடிக்கிறார் .

சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் வரும் பிரேம் குமார் , பெசன்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் .
சிறப்பான ஒளிப்பதிவில் பிரவீன் பாலு ஒளிப்பதிவு .
கணவன் – மனைவிக்கு இடையே ஆன்லைன் விளையாட்டான ரியாலிட்டி ஷோ எனப்படும் விளையாட்டையும் அவர்கள் விளையாடும் விபரீத விளையாட்டினால் ஏற்படும் விளைவுகளையும் கதையாக கொண்டு யாரும் யூகிக்க முடியாத திருப்பமான முடிவுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவராஜ் 
ரேட்டிங் : 3 / 5