Take a fresh look at your lifestyle.

‘கெவி’ – விமர்சனம்

79

ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா தயாரிப்பில் தமிழ் தயாளன் இயக்கத்தில் ஷீலா ராஜ்குமார், ஜாக்லின், ஆதவன், சார்ல்ஸ் வினோத், ஜீவ சுப்ரமணியம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கெவி’

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள “கெவி” என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஆதவன் இவரது மனைவி ஷீலா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த பகுதியில் சாலை வசதி, மருத்துவ வசதி இல்லாமல் இருக்கிறது.

இதே சமயம் தேர்தல் பிரசாரத்திற்காக எம்.எல்.ஏ வேட்பாளர் வரும் வேலையில் மலை சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிர் இழக்கின்றனர். அதை ஆவேசத்துடன் தட்டிக் கேட்கிறார் ஆதவன். அப்போது போலீஸ் அதிகாரியாக இருக்கும் சார்ல்ஸை செருப்பால் ஊர் மக்கள் அடிக்கின்றனர்.இதனால், ஆதவன் மீது கோபமடையும் போலீஸ் அதிகாரி அவரை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறார் ஆதவனின் மனைவியான ஷீலாவிற்கு பிரசவ வலி வர அவரை காப்பாற்ற ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து டோலி கட்டி ஷீலாவை காட்டுவலியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்படுகின்றனர்.

மற்றொரு பக்கம் வேலை முடிந்து இரவு வீடு திரும்பும் ஆதவனை போலீஸ் அதிகாரிகள அவரை  கொலை செய்ய முயற்சிக்கின்றனர் .

போலிசாரிடம் சிக்கி ஆதவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட  மறுபக்கம் கர்ப்பிணியான ஷீலாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுகிறது.

 
முடிவில் போலீசாரிடம் இருந்து நாயகன் ஆதவன் உயிர் தப்பினாரா ?
ஷீலாவுக்கு பிறக்கும்  குழந்தையை கிராம மக்கள் காப்பற்றினார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘கெவி’ 
மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் 

நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  அனைவரின் பாராட்டை பெறுகிறார்.

பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி இசையும் ,, பின்னணி இசையும்  கதையோடு  பயணிக்கிறது. 

ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு மலை,காட்டு, இரவு நேரம் என அனைத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்.

மலைவாழ் மக்களின் பிரட்சனைகளையும்  போராட்டங்களையும், அரசியல் வாதிகளின்அராஜக போக்குடன் , அதிகாரிகளின் அலட்சியத்தையும் மைய கருவாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்தமிழ் தயாளன்,  
ரேட்டிங் : 3.5 / 5