‘ஜென்டில்வுமன்’ – விமர்சனம்

சென்னையில் எல் ஐ சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி கிருஷ்ணன், நாயகி லிஜோமோலை திருமணம் செய்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் சந்தோஷமாக வாழந்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளியூரிலிருந்து லிஜோமோல் தோழியின் சகோதரியான தாரணி வேலைக்கான நேர்முகத்தேர்விற்காக லிஜோமோல் வீட்டிற்கு வந்து தங்குகிறார், இச்சமயத்தில், லிஜோமோல் கோவிலுக்குச் செல்கிறார்.. வீட்டில் இருக்கும் தாரணியிடம் தவறான நோக்கத்தில் நெருங்கி வருகிறார்.அழகில் மயங்கும் பெண் பித்தனான ஹரி கிருஷ்ணன் அவரை அடைய துடிக்கும்போது எதிர்பாராத விதமாக கிழே விழுந்து தலையில்  அடிப்பட்டு மயக்கமடைகிறார் .

கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வரும் மயக்க நிலையில் இருக்கும் கணவன் ஹரி கிருஷ்ணனை பார்த்து லிஜோமோல் ஜோஸ் அதிர்ச்சியடையும் நேரத்தில் ஹரி கிருஷ்ணனின் செல்போனில் அவரது கள்ள காதலி லாஸ்லியா செல்லமாக பேசுகிறார் 

தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று  நினைக்கும் லிஜோமோல் ஜோஸ் கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்டதும் கடும் கோபத்தில் அருகில் உள்ள அரிவாளால் வெட்டி கணவரை கொலை செய்து விடுகிறார் லிஜோமோல் ஜோஸ். 

இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர், கணவர் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்குகிறார். 

 இதற்கிடையே, ஹரி கிருஷ்ணனை காணவில்லை என அவரது காதலி லாஸ்லியா போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீசார் லிஜோமோல் ஜோஸ் வீட்டிற்கு சென்று அவரை விசாரிக்க தொடங்குகின்றனர் .

முடிவில் லிஜோமோல் ஜோஸ் குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த ஹரி கிருஷ்ணன் உடலை போலீசார்   கண்டுபிடித்தார்களா?

கணவரை கொலை செய்துவிட்டு போலீசிடம் சகஜமாக பேசும்  லிஜோமோல் ஜோஸ் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தாரா? இல்லையா ? என்பதை  சொல்லும் படம்தான் ‘ஜென்டில்வுமன்’.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ் திருமணமான பெண்ணாக, அதே சமயம் கணவரை கொலை செய்ததும் எந்த வித பயம் இல்லாமல்   உடல் மொழியில்  முக பாவனைகளில் இயல்பாக மிக சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் 

கதைகேற்றபடி நாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன்,  மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா,லிஜோமோல் ஜோஸின் தங்கையாக நடித்திருக்கும் தாரணி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, போலீஸ் இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் வைரபாலன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலம் .

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையும்,  ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன் படத்திற்கு பக்க பலம் 

உண்மையில் நடந்த  குற்ற சம்பவத்தை  மையமாக கொண்ட கதையுடன். திறமையாக சாமர்த்தியமாக நாயகி கையாளும் காட்சிகளான   திரைக்கதை அமைப்பில் அதிர்ச்சியான கதை களமாக இருந்தாலும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி கிரைம் சஸ்பென்ஸ் கலந்த படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்

ரேட்டிங் –   3 / 5

 

 

Comments (0)
Add Comment