திரைப்படத்துறையில் கலை இயக்குநராக பணியாற்றும் ஜீவா பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்’ என்று சொல்லக்கூடிய பயங்கரமான வீடு போன்ற ஒரு அரங்கத்தை உருவாக்குகிறார்.
அதை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்கிறது.
அதே சமயம், அந்த பங்களாவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதையும் அறிந்துக் கொள்ளும் ஜீவா, அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
முடிவில் ஜீவாவின் முயற்சியில் அனைத்து உண்மைகளும் தெரிந்ததா ? உயிருக்கு போராடும் தனது தாயை ஜீவா காப்பாற்றினாரா.?இல்லையா ? என்பதை சித்த மருத்துவம் மற்றும் சித்தர்களின் முக்கியத்துவதோடு சொல்லும் ‘அகத்தியா’.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜீவா சினிமா பட கலை இயக்குனர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் என்ற இரண்டு விதமான கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையும் , தீபக்குமார் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
சித்தர்களின் பெருமையை சொல்வதுடன் சித்த மருத்துவத்தின் மகிமையை கதையாக கொண்டு திரைக்கதையில் பேண்டஸி, ஹிஸ்டாரிக்கல், காமெடி, சென்டிமென்ட் என அனைவரும் ரசிக்க கூடிய திகில் கலந்த படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பா விஜய்