‘தண்டேல்’ – விமர்சனம்

 

நாக சைதன்யா மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்பவர்களின் உயிர் உத்திரவாதம் இல்லை என்பதால், தன் காதலன் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதை நாயகி சாய் பல்லவி விரும்பவில்லை.

அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிடும்படி சொல்கிறார். நாயகியின் பேச்சையும் மீறி நாக சைதன்யா மீன் பிடிக்க செல்கிறார்.

அப்போது அவரும், அவருடன் சென்ற மீனவர்களும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுவதால், பாகிஸ்தான் கடற்படை கைது செய்கிறது. மறுபக்கம் சாய் பல்லவிக்கு கருணாகரனுடன்  திருமண ஏற்பாடு நடக்கிறது.

முடிவில் நாக சைதன்யா பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையானாரா?

சாய் பல்லவியை திருமணம் செய்தாரா ?  இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்  ‘தண்டேல்’

கதையின் நாயகனாக மீனவராக நடித்திருக்கும் நாக சைதன்யா மீனவர் கதாப்பாத்திரமாகவே உடல் மொழி மற்றும் பேச்சு மொழி என இயல்பான நடிப்பில் காதல் காட்சிகளிலும் , அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளிலும் கதையின் நாயகனாக அசத்துகிறார் .

சாய் பல்லவி மிக அற்புதமான நடிப்பில் காதலனுக்காக ஏங்குவது, காதலனை பிரிந்து இருக்கும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சத்யா என்கிற கதாபாத்திரமாக படம் முழுவதும் வாழ்கிறார் .
படத்தில் நடித்த பிரகாஷ் பெலவாடி ,திவ்யா பிள்ளை ,ராவ் ரமேஷ், கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன் ,பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி, கல்ப லதா
கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா அனைவரும் நடிப்பில்  திரைக் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர். 
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும்  ,ஷம்தத்- இன் ஒளிப்பதிவும்  படத்திற்கு பெரிய பலம்
மீனவர்களின் வாழ்க்கையுடன் காதலையும் நம் தேச பற்றையும் மையமாக கொண்ட கதையுடன் அழுத்தமான காதலுடன் படத்தை இயக்கியுள்ளார்  இயக்குனர் சந்தூ மொண்டேடி.
ரேட்டிங் – 3  /  5
Comments (0)
Add Comment