டார்க் திரைவிமர்சனம்

பைவ் ஸ்டார் செந்தில் வெளியீட்டில்
APV மாறன், கணேஷ் கே பாபு தயாரிப்பில் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்திக், அஞ்சனா நெத்ருன்,நட்டி, கே. பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ் திகில் திரைப்படம் ‘டார்க்’

கதை

பாக்யராஜ் குடியிருக்கும் மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவன் மற்ற இரு இளைஞர்களை கொன்று தானும் தீவைத்துக் கொண்டு தீயில் மூன்று பேரும் இறந்துவிடுகிறார்கள். கடனுக்காக வீட்டை விற்கலாம் ஏன்றால் பேய்வீடு என்று வாங்க யாரும் வரவில்லை என்ற வேதனையில் இருக்கிறார் கே பாக்யராஜ்.. இந்த சூழ்நிலையில் கதாநாயகன் அஜய் கார்த்திக் அந்த மாடி வீட்டுக்கு வாடகைக்கு குடி வருகிறார். அங்கு பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. அது என்ன? அஜய் கார்த்தி அந்த அமானுஷ்ய சக்தியியமிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதற்கு விடை சொல்வதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை.

கதையின் நாயகனாக அஜய் கார்த்திக் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். முக்கிய வேடத்தில் மறைந்த கே பாக்யராஜ் அவர்கள் சிறப்பாகவே நடித்துள்ளார். அஞ்சனா நெத்ருன் நடிப்பும் அருமை. விடிவி கணேஷ் வரும் காட்சிகள் சிரிப்பலை. போலிஸ் அதிகாரியாக நட்டி, சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் சிபி சக்ரவர்த்தி, இந்துமதி என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர.
மனு ரமேசன் இசையில் பிண்ணனி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம். ரவி சக்தியின் ஒளிப்பதிவு அருமை.

இயக்குநர் கல்யாண் கே ஜெகன் எல்லோரும் ரசிக்கும்படியான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் கதையை சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5

Comments (0)
Add Comment