நூறு சாமி திரைவிமர்சனம்

பிச்சைகாரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நூறு சாமி. இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள படம்.

கதை

26 வயதில் தனது கணவரை இழக்கும் செல்வி (நடிகை ஸ்வாசிகா), தனது இரண்டு மகன்களையும் படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார். ஒரு பெண் கணவனை இழந்து தனியாக வாழும்போது எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிரமங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில் இரண்டாம் திருமணம் ஸ்வாசிகா பண்ணிக்கலாம் என்று நினைக்க, இதை தெரிந்து கொண்ட மூத்த மகன் பாஸ்கர் (அஜய்) தனது அம்மாவிடம் பேசாமலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் சிரமப்படுகிறார். பின் அம்மா இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதால் படிப்பை நல்ல படியாக படித்து முடித்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இளைய மகன் விவேக் (சக்தி) கல்லூரியில் படித்து கொண்டிருகிறார். பாஸ்கருக்கு திருமணம் செய்ய வேண்டும் என அம்மாவான செல்வி முடிவு எடுக்க, தனது அம்மா மறுமணம் செய்துகொண்டால் தான் நான் திருமணமே செய்துகொள்வேன் என முடிவு செய்கிறார் பாஸ்கர். முதலில் தனது அம்மாவின் மறுமணத்திற்கு முட்டுக்கட்டையாக நின்ற பாஸ்கர், தற்போது அம்மாவை மறுமணம் செய்துகொள்ளும் படி கேட்கிறார். ஆனால், செல்வி இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அம்மா செல்விக்கு கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய இரு மகன்களும் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் செல்வி தனது மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, அதன்பின் நடந்தது என்ன? இந்த முடிவால் இந்த குடும்பமும், செல்வியும் சந்தித்த இன்னல்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.

செல்வி கதாபாத்திரத்தில் சுவாசிகா சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். பல் வார்டுகள் கிடைக்கும்.
விஜய் ஆண்டனியின் என்ட்ரி, அவருடைய நடிப்பு, அவர் இந்த உலகத்தை பார்க்கும் விதம் என அனைத்தும் நன்றாக இருந்தது. செல்வி மகன்களான அஜய் , சக்திராஜ் சிறப்பாக நடித்துள்ளனர்.
கருணாஸ், அருள்தாஸ், மூர்த்தி, பாலாஜி சக்திவேல், ஹென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி, லிஜோமோல், காவ்யா, முணீஸ்காந்த், பாடிணிகுமார்
என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
SB தர்ஷன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பாலாஜி Sriram இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

இயக்குநர் சசி கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தான் படித்த உண்மைச் சம்பவத்தை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள். இதை தயாரித்த விஜய் ஆண்டனி க்கும் பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3‌5/5

Comments (0)
Add Comment