ஆட்டி திரைவிமர்சனம்

இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் கிட்டு இயக்கத்தில் இசக்கி கார்வண்ணன், அபி நட்ஷத்திரா, காதல் சுகுமார், பிரவீண் பழனிசாமி, சௌந்தர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆட்டி.

1970 ல் நடக்கிறது கதை.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் மாற்றலாகி ஒருமலைப்பகுதிக்கு வருகிறார்.

எந்தக் குற்றமும் பதிவாகாத அந்தப் பகுதியில் காவல் நிலையம் இருப்பதே ஆச்சரியமாக இருக்க, அதுவே இசக்கிக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.

1880 களில் வெள்ளையர்கள் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய மக்களை வரவழைத்து அங்கே பணி அமர்த்தியதில் அவர்கள் பரம்பரையாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வியறிவு இல்லாத அந்த கிராமத்து மக்களின் அடுத்த.தலைமுறையாவது கல்வி அறிவு.பெற வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு வரும் என்ஜிஓ ஆசிரியர்கள் மூலமாக கல்வியறிவு பெற்ற அபி நட்சத்திரா கல்வி பயிற்றுவித்து வருகிறார்.

அப்படி அங்கே புதிதாக வரும் ஒரு ஆசிரியர் பிரவீண் பழனிசாமி, அபி நட்சத்திராவிடம் அத்து மீறி நடக்க முயல, கொதித்துப்போன அபி அவரை அறைந்து விடுகிறார். அதைத்தொடர்ந்து பிரவீண் மர்மமாக இறந்து போக, இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணனுக்குஅந்த கொலையை கண்டுபிடிக்கும் வேலை வருகிறது.

அவர் துப்புத்துலக்க ஆரம்பிக்க, அந்த கிராமத்தை பற்றிய முன்கதை, அங்கு போலீஸ் ஸ்டேஷன் உருவான வரலாறு என்று எல்லா மர்மங்களையும் கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

அமைதி ராஜாக வரும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
மலைவாழ் சிறுவர்களூக்கு கல்வியறிவு தரும் கேரக்டரில் அபி நட்சத்திரா சிறப்பாகவே நடித்துள்ளார்.
வில்லனாக நடித்திருக்கும் வரும் பிரவீண் பழனிசாமி நடிப்பும் அருமை.
காதல் சுகுமார், சௌந்தர், இரு சிறுவர்கள் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதிபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். தீசன் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிக்கு உயிரூட்டுகிறது
திருமுருகனின் திரைக்கதை பரபரப்பை ஏற்படுத்துகிறது

பெண்களுக்கு எதிரன பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் கிட்டு. பாராட்டுக்கள்.

Comments (0)
Add Comment