கட்டாளன் திரைவிமர்சனம்

கட்டாளன் திரைவிமர்சனம்

பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், சுனில், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கட்டாளன்.

கதை

கேரள வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைக் கைப்பற்றி, அங்கு யானை தந்தங்களை கடத்தும் கும்பலுக்கு இடையே நடக்கும் மோதலே ‘காட்டாளன்’. கடத்தல் தலைவன் சுனில், தன் தொழிலை நிலைநிறுத்த ஆண்டனி வர்கீஸை நாடுகிறார். ஆனால், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக ஆண்டனி வர்கீஸ் மாறுகிறார். அதன்பிறகு கடத்தல்காரர்களுக்கு எதிராக அவர் எப்படி போரிடுகிறார், இந்த யுத்தத்தில் யார் வென்றார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்வனாக சுனில் மிரட்டியுள்ளார். துஷாரா விஜயன், கபீர் துஹான் சிங் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை: படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்: பார்ப்பதற்கு ரசிக்கும்படி அமைந்துள்ளன. ஒளிம்பதிவும் அருமை.

இயக்குநர் பவுல் ஜார்ஜ் பக்கா ஆக்ஷன் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5

Comments (0)
Add Comment