வாரண்ட் வெப்சீரிஸ் விமர்சனம்

விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் பிரசாந்த் பிண்டியராஜன், அருளாதாஸ், பாலாஜி சக்திவேல், நம்ரிதா, சாயாதேவி மறாறும் பலர் நடித்து Zee5 ல் வெளியாகியிருக்கும் தொடர் வாரண்ட்.

கதை

தொடர் ஓப்பனிங்கில் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றுகிறார் நாயகன் கோட்டைக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்) . விசாரணைக்கு வந்த கைதி கோட்டைக்கருப்பு அடித்ததால் சிறையில் இறந்துவிடுகிறார். ஜெயபிரகாஷ் தலைமையினால சிறப்பு குழு ஒன்று இந்த கொலையை விசாரிக்கிறார்கள். தன் வாழ்க்கையை சொல்ல ஆரம்பிக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். தந்தையின் ஆசைக்காக எப்படியாவது அரசு வேலையில் சேர்வதற்காக எல்லா தேர்வுகளையும் எழுதுகிறார் நாயகன் கோட்டைக்கருப்பன். ஆனால் எல்லா தேர்வுகளிலும் ஒரு சில மார்க் வித்தியாசத்தில் அரசு வேலையை தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் கோட்டைகருப்பின் மாமா காளி வெங்கட் எஸ். பி அலுவலகத்தில் டிரைவராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி கருப்புக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். வீட்டில் அப்பா அம்மாவால் செல்லமாக வளர்க்கப்படும் கருப்பு போலீஸ் வேலையில் சேர்ந்த முதல் நாளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். இவரது அப்பாவியான குனத்தால் சக அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளால் கேலிக்கு ஆளாகும் கோட்டைக்கருப்பு தன்னை போலீஸ் வேலைக்கு ஏற்ற மாதிரியான ஒரு நபராக மாற்றிக் கொள்ளும் முனைப்பில் வழிதவறிப் போவதே இந்த தொடரின் சுவராஸ்யமான கதை.

பிரசாந்த் பாண்டியராஜ் தொடரின் நாயகனாக கவலராக நன்றாகவே நடித்துள்ளார். அப்பாவாக பாலாஜி சக்திவேலும் அம்மாவாக படித்தவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இன்ஸ்பெக்டராக அருள்தாஸ் நடிப்பும் அருமை. மனைவியாக நம்ரிதா, முக்கிய வேடத்தில் சாயாதேவி, காளிவெங்கட் என இந்த தொடரில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தொடருக்கான ஒளிப்பதிவும் அருமை. ராமரின் எடிட்டிங் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். சாம் சி. எஸ்ஸின் பாடலும் பிண்ணனி இசையும் தொடருக்கு பலம் சேர்த்துள்ளது.

ஒரு எளிமையான மனிதனாக இருந்த கருப்பு ஒரு கைதியை அடித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு தள்ளியது எது என்பதில் இருந்து சுவாராஸ்யமா தொடங்கும் வாரன்ட் தொடரை எல்லோரும் ரசிக்கும்படி கடைசிவரை சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் நடராஜன்.

மதிப்பெண் 4/5

#movie reviews#New film#new release#Tamil movie#ungal cinema#warant moviecinema news
Comments (0)
Add Comment