கிரிஜா வரதராஜ் தயாரிப்பில் ஏ. ஆர். காந்திகிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், கிரித்திக்மோகன், அமிதா ரங்கநாத், கஸ்தூரி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பிரேக்ஃபாஸ்ட்.
கதை
பட ஓப்பனிங்கிலே நீதிமன்றத்தில் கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத் விவகாரத்து வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்கிறார்கள். கவுண்சிலிங்கிற்காக கஸ்தூரியிடம் இவர்களை அனுப்பிவைக்கிறார் நீதிபதி. கஸ்தூரி அவர்களுக்கு நான் சென்சார் போர்டு உறுப்பினர் என்பதால் ஒரு நல்ல படத்தை சமீபமா பார்த்தேன் என்று தான் பார்த்த காதல்கதையை இருவருக்கும் சொல்கிறார் கஸ்தூரி. கஸ்தூரி சொன்ன கதையில்
தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையின்றி கஷ்ட்டப்படும் கிராமத்து இளைஞர் நாயகன் ராணவுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார். இவர்களது நட்பு காதலாக மாற, இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்ளும் ரோஸ்மின், தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை அவருக்கு கொடுத்து, வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறார். ஆனால், இவர்களது மணவாழ்க்கையில் காதலர்களாக இருந்த போது இருந்த மகிழ்ச்சி, அன்பு பரிமாற்றம் மறைந்து, மோதலும், வெறுப்பும் அதிகரிக்கிறது. அதற்கு என்ன காரணம் ?, இப்படி காதலித்த வேகத்தை விட அதீத வேகத்தில் பிரிய வேண்டும், என்ற முடிவு எடுத்த இவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்று அவர்களுக்கு சொல்கிறார். அந்த கதையை கேட்டு விவகாரத்தை கைவிட்டார்களா? கிருத்திக் மோகன் அமிதா ரங்கநாத் ஜோடி என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், புதுமுகமா என்று கேட்குமளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை ரோஸ்மின், முதல் படத்திலேயே கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நம்மை அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.
மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் நடிப்பும் சிறப்பு.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா, ரவிமரியா, ரெங்கநாதன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் ஏ ஆர் காந்திகிருஷ்ணா இன்றைய இளைஞர்கள் அவசர அவசரமாக காதலிக்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குள் விவகாரத்து செய்து கொள்கிறார்கள். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது குடும்பத்துடன் எப்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குடும்பத்துடன் எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
மதிப்பெண் 3/5