ஆபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், நிரூப், மாஸ்டர் சௌர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பைக்கர்.
கதை
தன் மகனை இளம்பிராயத்தில் இருந்து பைக்கர் சாம்பியன் என்ற கனவுடன் வளர்க்கிறார் அப்பா டாக்டர் ராஜசேகர்.
மகனை பைக்கராக உருவாக்கிய ராஜசேகருக்கு ஒரு ஷாக். காதலி மாளவிகா நாயரை திருமணம் செய்த பிறகு ரேஸ் வேண்டாம் என மறுத்து அப்பாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு கண்காணாத இடத்துக்கு சென்று விடுகிறார் ஷர்வானந்த். மோட்டோகிராஸுக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனம் ராஜசேகருடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது. இதனால் மகன்மீது வெறுப்புகாகொண்டு பேசாமல் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சிலவருடங்கள் கழித்து ஷர்வானந்த் மீண்டும் ரேஸில் இறங்க அப்பாவிடம் வருகிறார். பேச மறுக்கும் அப்பாவை சம்மதிக்க வைத்து பைக்ரேசில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
டாக்டர் ராஜசேகர் கோச்சாக சிறப்பாக நடித்துள்ளார். ஷர்வானந்த் இளமை கெட்டப்பிலும் ரேசர் கெட்டப்பிலும் அழகாலும் நடிப்பாலும் சண்டைக்காட்சிகளிலும் அசத்துகிறார். காதலியாக மாளவிகா நாயர் நடிப்பும் அருமை.
வில்லனாக வரும் அதுல் குல்கர்னியின் நடிப்பு மிரட்டல்..
ஷர்வானந்த் மகனாக நடித்திருக்கும் சிறுவன் நடிப்பும் அருமை. நிரூப் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம். ஜே யுவராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மோட்டோகிராஸ் எனப்படும் பைக் ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து குடும்பத்தின் உணர்ச்சிப் போராட்டத்தையும் கலந்து எல்லோரும் ரசிக்கும்படியான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி. பாராட்டுக்கள்.
மோட்டார் ரேஸை திரையில் பார்க்கும் அனுபவம் அற்புதம்.
பார்க்கவேண்டிய படம்.
மதிப்பெண் 4/5