கார்மேனி செல்வம் திரைவிமர்சனம்

ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரகனி லஷ்மி பிரியா, கௌதம்மேனன் அபிநயா, கோதண்டம் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 3 ல் வெளியாகும் படம் கார்மேனி செல்வம்.

கதை

சமுத்ரகனி தன் மனைவி (லஷ்மி பிரியா) மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமுத்ரகனி கௌதமனிடம் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். மனைவி தள்ளுவண்டி டிபன் கடை நடத்திவருகிறார். மகன் பள்ளியில் படித்து வருகிறான். இந்த சூழ்நிலையில் கௌதம் மேனன் தன் குடும்பத்துடன் ஒரு மாதம் வெளியூர் செல்கிறார். வெளியூர் செல்லும்போது சமுத்ரகனிக்கு கொடுக்கும் பணத்தை வாங்க மறுத்து அவர்களை ஏர்போட்டில் விட்டுவிட்டு காரில் வரும்போது மகனுக்கு அடிபட்டு விட்டது ஹாஸ்பிட்டல் அழைத்து செல்கிறேன் பணம் ஏற்பாடு செய்து வாருங்கள் என்று சொல்ல தன் மச்சானுக்கு மொய் வைத்த பணத்தை திருப்பி தருவதாக சொல்லி அவரிடம் கெஞ்சி கேட்டு வாங்கிவந்து மகனை காப்பாற்றுகிறார். மனைவி பணம் ஏது என்று கேட்க உண்மையை சொல்ல நான்கு நாட்களில் பணத்தை ஏற்பாடு செய்து தன் தம்பியிடம் தரவேண்டும் என்று சொல்கிறார். பணம் சம்பாதிக்க வேறுவழியின்றி கௌதம் மேனன் காரை வாடகை டாக்ஸியாக பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இதன்பிறகு கிரிடிட் கார்டில் வீட்டிற்கு பொருள் வாங்குகிறார். தானும் தன் மனைவியும் சம்பாதித்த பணத்தையும் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தையும் வைத்து அரை கிரவுண்டுக்கு அட்வான்ஸ் ஸாக 50000 கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் கடன் சூழ்நிலையால் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கிறார். அதன்பிறகு கடனை அடைத்து நிம்மதியாக குடும்பத்துடன் வாழ்க்கை நடத்தினாரா? தன் காரை வாடகைக்கு விட்ட உண்மை தெரிந்து கௌதம்மேனன் சமுத்ரகனியை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக சமுத்ரகனி இப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். மனைவியாக லஷ்மிப்ரியா சிறப்பாக நடித்திருக்கிறார்.கௌதம்மேனன் கேரக்டர் அருமை அதை சிறப்பாக செய்துள்ளார். இவரது மனைவியாக அபிநயாவும் சிறப்பாக நடித்துள்ளார்.சமுத்ரகனியின் மகனாக நடித்த சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான்.கார்த்திக்குமார் சீன்ஸ் அருமை. கோதண்டம், படவாகோபி, மதுமிதா, அர்ஜுனன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இசை மியூசிக் லட்டு ஸ்டுடியோ சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராம் சக்ரி சம்பாதிக்கும் பணத்ததை வைத்து கணக்கு போட்டு செலவு செய்து நிம்மதியாக வாழுங்கள் இல்லையேல் வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் என்ற கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி பீல்குட் மூவியாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3.5/5

Comments (0)
Add Comment