முத்து என்கிற காட்டான் வெப் தொடர் விமர்சனம்

முத்து என்கிற காட்டான் வெப் தொடர் விமர்சனம்

தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். மார்ச் 27ல் வெளியாகியிருக்கும் தொடர்.

கதை

மார்ச் 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த 10 அத்தியாயங்களைக் கொண்ட தொடர், ஆரம்பத்திலிருந்தே ஒரு வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ளது.

கதையின் முதல் காட்சி ஹீரோவின் வெட்டப்பட்ட தலை!

கிராமத்தில் உள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு புகாரே வருவதில்லை. புகார் வராததால் காவல் நிலையம் இழுத்து மூடப்படும் என்பதால் ஒரு கேஸை உருவாக்கப்பார்க்கிறார்கள் அந்த ஸ்டைஷனில் வேலை பார்ப்பவர்களான முத்துக்குமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன்.
இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி தலை மட்டும் கிடைக்கிறது. இதன் பிறகு கதை சூடிபிடிக்க தொடங்குகிறது. விஜய் சேதுபதி யார்? அவரை யார் கொலை சேய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதை போலிஸ் அதிகாரிகளான முத்துக்குமார், சிங்கம்புலி, முருகன் வடிவேல் கண்டுபிடிப்பதே முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் சுவாராஸ்யமான கதை.

விஜய்சேதுபதி இந்த தொடரில் சிறப்பாக நடித்துள்ளார். இத்தொடரில் முத்துக்குமார், சிங்கம்புலி,
மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திராஎன இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ராஜேஷ் முருகனின் இசை தொடருக்கு பெரிய பலம்.
நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு அருமை.

மணிகண்டன் தந்தை வாழ்க்கையில் நடந்த கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் மணிகண்டனும் அஜித்குமாரும். பாராட்டுக்கள்.

Comments (0)
Add Comment