Satan The Dark Movie Review
மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் ஃபிரெட்ரிக் ஜான் அய்ரா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடித்து வெளியான தமிழ் ஹாரர்-சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ‘சட்டன்: த டார்க்’ (Satan: The Dark).
கதை
ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்தில் அஸ்தினாபுரம் கிராமத்தில் தவறாக நடக்கும் மாந்திரீக சடங்கு, ஒரு இருண்ட சாபத்தை உருவாக்குகிறது. பல தலைமுறைகளாக தொடரும் இந்த சாபத்திலிருந்து, தன் காதலியை மீட்க நாயகன் போராடுவதே படத்தின் மீதிக்கதை
நாயகன் FJ (Fredrick John) நாயகி அய்ரா தங்களின் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். சாந்தினியின் நடிப்பும் அருமை.
மோனோ பெட்ரா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாலா ஜி. ராமசாமியின் ஒளிப்பதிவு இருண்ட காட்சிகளை மிரட்டலாக காட்டியுள்ளார்.
அஸ்வின் கிருஷ்ணா இசை படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் பேய் கதையை சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
திகில் மற்றும் மாந்திரீக கதைகளை விரும்புபவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.