ஹேப்பி ராஜ் திரைவிமர்சனம்

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகெளரி ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், மதுரை முத்து, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஹேப்பி ராஜ்.

கதை

படத்தின் முதல் காட்சியிலேயே தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்த பிரார்த்தனா நாதன் குதிரை முட்டை மருமகளாக முடியாது என்கிற காரணத்தை சொல்லியே ஹாப்பியின்(GVபிரகாஷ்) காதலை பிரேக்கப் செய்கிறார். ஏன் என்ற‌ பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.

குதிரை முட்டை’ வாத்தியார் என ஜார்ஜ் மரியனை ஊரே கேலி செய்ய அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹாப்பி என்கிற ஆனந்த் ராஜ்(GV பிரகாஷ்) என பெயர் வைத்து தனது மகனை ராஜா போலவே வளர்க்கிறார். ஆனால், தந்தையை குதிரை முட்டை என கிண்டல் செய்த ஊர் மக்கள் ஹாப்பி ராஜையும் சின்ன குதிரை முட்டை என கலாய்க்க ஆரம்பிக்கின்றனர். இதனால், அவருக்கு அந்த ஊரில் காதல் கூட செட்டாகவில்லை.
இந்த சூழ்நிலையில் ஜீவி பிரகாஷ்
ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் பெங்களூருவுக்கு ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்குச் செல்லும் ஹாப்பி அங்கே ஹீரோயின் ஸ்ரீகெளரி ப்ரியாவை சந்திக்கிறார்.
இருவருக்கும் காதல் மலர அந்த காதலுக்கு இருவரது அப்பாக்களும் எப்படி பிரச்னையாக மாறுகின்றனர். கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? இயக்குநர் சொல்ல வந்த கருத்து என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக GV பிரகாஷ் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். கதாநாயகியாக
ஸ்ரீகெளரி ப்ரியா அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். கதாநாயகியின் அப்பாவாக நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாஸ் நடித்திருக்கிறார் . கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் அப்பாவாக ஜார்ஜ் மரியான் அம்மாவாக கீதா கைலாசம் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பிராத்தனா நாதன் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
எடிட்டர் செல்வா ஆர்.கே படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் அப்பா மகன் பாசத்தை சொல்ல முயன்றிருக்கிறார். படம்‌ பார்க்கிற‌ மக்கள் அழனும் சிரிக்கனும் ரசிக்கனும் இந்த படத்தில் அது இல்லை. இயக்குநருக்கு தோன்றியதை நீளமாக எடுத்திருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கவனம்‌ செலுத்தி கிரிப்பா சுவாராஸ்யமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள்.

ஹேப்பி ராஜ் ஹேப்பியாக இல்லை.

மதிப்பெண் 2.5/5

#happy raj movie#New film#new release#Tamil movie#ungal cinemacinema newsmovie review
Comments (0)
Add Comment