Youth Movie Review

Youth Movie Review

கருப்பையா C ராம் சுலோச்சனா குமார் இருவர் தயாரிப்பில் கென் கருணாஸ் நடிப்பு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் யூத். இவருடன் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை

10ஆம் வகுப்பில் ஜஸ்ட் பாஸாகி 11ஆம் வகுப்பு செல்லும் பிரவீன் (கென் கருணாஸ்), எப்படியாவது காதலிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் பள்ளிக்கு செல்கிறார்.
ஆனால், ஒரு பெண் கூட இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கிறார் மீனாட்சி. இவருக்கும் கென்னுக்கும் இடையே காதல் மலர, இந்த காதலை பிரிக்க வேண்டும் என்கிற சதியும் சிலரால் நடக்கிறது.
மீனாட்சி தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்கிற காரணத்தினால் ஊருக்கு செல்கிறார். இந்த சமயத்தில், சோனல் என்கிற பெண் கென்னிடம் தனது காதலை கூற, அவருக்கு நோ சொல்ல மறுக்கிறார் கென். இந்த நிலையில், கென் – சோனல் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் மீனாட்சி, கென்னுடன் பிரேக்கப் செய்கிறார். இரணாடாவது காதலித்த பெண்ணின் சூயரூபமும் தெரிய வந்து அந்த காதலும் கைகூடாமல் போகிறது.
காதல் தோல்வியில் இருக்கும் கென்னுக்கு அனிஷ்மாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இதுவரை நான் செய்தது காதல் இல்லை, இதுதான் உண்மையான காதல் என புரிந்துகொண்டு அனிஷ்மாவுடன் பழகி வரும் கென், தனது காதலை பள்ளியின் இறுதி நாளில் அவரிடம் கூறுகிறார். ஆனால், நான் உன்னை நல்ல நண்பனாகதான் பார்த்தேன் என அனிஷ்மா கூற, உடைந்துபோகிறார் கென்.
ஒரு கட்டத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ணினால் காதலிப்பதாக அனிஷ்மா சொல்ல, கென் பாஸ் ஆகி அவரை கரம் பிடித்தாரா? அப்பா அம்மா ஆசைப்படி படித்து வேலைக்கு சென்றாரா?
கென்னின் பள்ளி வாழ்க்கை என்னவானது? இதன்பின் அவர் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்தித்தார் என்பதே படத்தின் மீதி கதை.

ஹீரோவாக அறிமுகமாகியுள்ள கென் கருணாஸ் துள்ளலான நடிப்பில் பக்காவான யங் கமர்ஷியல் ஹீரோவாக நடனம், நகைச்சுவை, எமோஷ்னல், ஆக்ஷன் என அனைத்திலும் தன் நடிப்பால் பட்டையை கிளப்புகிறார். கென்னின்
காதலிகளாக மீனாட்சி, அனிஷ்மா, பிரியான்ஷி மூவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நளினி, கென்னின் நண்பர்களாக நடித்தவர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் என இதில் நடித்தவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த ரோலில் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
GV பிரகாஷின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். விக்கியின் ஒளிப்பதிவு அருமை.

கென் கருணாஸ் பேமிலியுடன் எல்லோரும் ரசிக்கும்படியான வெற்றி படத்தை நடித்து இயக்கியுள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5

#firstlook poster#movie launch#New film#Tamil movie#ungal cinemacinema newsmovie review
Comments (0)
Add Comment