போலிஸ் பேமிலி திரைவிமர்சனம்

லாக்கப் மரணங்களை பற்றி பேசும் திரைப்படம்.

மலைச்சாமி ஏ எம் ராஜா தயாரிப்பில்
பாலு இயக்கத்தில்
பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார்,, ராஜா மலைச்சாமி,, சுரேகா, நிஷா துபே மற்றும் பலர் நடித்து மார்ச் 13ல் வெளியாகும் படம் போலிஸ் பேமிலி.

கதை

பட ஓப்பனிங்கில் போலிஸாக இருக்கும் சுகுமார் சந்தேக கேஸில் ஒரு பையனை செக் பண்ணும்போது அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை கணடுபிடித்து அவனை ஸ்டேஷன் அழைத்துச்சென்று 5 போலிஸ் அடிக்கிறார்கள் அடி தாங்காமல் மயக்கத்தில் இருக்க அவனை கொணடு சென்று ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறார்கள். விடிந்தால் போட்டுவிட்டு வந்த அவனை மர்ம நபர் யாரோ கயிரை கொண்டு அவனை சாகடித்து விடுகிறார்கள். இது போலிஸ்க்கு தெரிந்து ஷாக் ஆக இறந்த பையன் பிரபல ரவுடி தனசேகர்(சரவணன்) மகன் என தெரிய வர மேலும் ஷாக் ஆகிறார்கள். சரவணனுக்கு தன் மகனை கொன்றவர்கள் போலிஸ் என நினைத்து ஒவ்வொருவரின் குடும்பத்தை பழிவாங்கி வர உண்மையான கொலைகாரனை போலிஸ் தேட முடிவு என்ன என்பதை படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை

பருத்திவீரன் சரவணன் வில்லனாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். காதல் சுகுமார் நீண்ட நாளைக்கு பிறகு நல்ல கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து படம் முழுக்க வந்து நம்மை கவர்கிறார்.
ராஜா மலைச்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக சுரேகா மற்றும் நிஷா துபே மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்தரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஜெயக்குமாரின் ஒளிப்பதிவுபடத்திற்கு பெரிய பலம்.

ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை இயக்குநர் பாலு ஏல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.

#ciema news#New film#police family movie#Tamil movie#ungal cinemamovie review
Comments (0)
Add Comment