ஃபேக் ஐடி ( #FAKEID ) என்ற குறும்படம் நேற்று குட்டி ஸ்டோரி யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது..

தயாரிப்பு : சங்கரி பிக்சர்ஸ்
வெளியீடு: குட்டி ஸ்டோரி ( kuttystory youtube )சேனல்
இயக்கம் : பாலு சைலாஷ்
நடிகர்கள்:
விஷ்ணு சந்திரசேகர், அனிஷா, vj தாரா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, பிரதாப், அஞ்சு அர்ஜுன் , ஜெகா ஆகியவரின் நடிப்பில் ஃபேக் ஐடி ( #FAKEID ) என்ற குறும்படம் நேற்று குட்டி ஸ்டோரி யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது..

தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கும் காதலன்.அவனுக்கு தக்க பாடம் புகட்ட நினைக்கும் கடவுள் அவனுக்கு வினோதமாக கொடுத்த தண்டனை அதனால் அவன் படும் அவஸ்தை என இப்படம் காமெடி கலந்த ஃபேன்டஸி பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புதுமுக நடிகர்கள் எல்லோரும் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்… எல்லாருடைய நடிப்பும் இந்த படத்திற்கு பலம் அமைந்துள்ளது..
படத்தை அவசரமாக ஓட விடாமல் எல்லா உணர்வுகளும் ஆடியன்ஸ்க்கு சென்றடைய நேரம் கொடுத்து வெட்டியே எடிட்டர் எம் கே விக்கி யை பாராட்டலாம்..
கேமராமேன் ஜாஃபிரி நடிகர்களையும் லொகேஷன் காட்டிய விதம் குறும்படத்தை அடுத்த கட்டத்திற்கு கூட்டி செல்கின்றது..
கோபம் ,காமெடி, கடவுள், நட்பு என்று பல தளத்தில் பயணம் செய்யும் குறும்படத்தின் எல்லா உணர்வுகளையும் ஆடியன்ஸ்க்கு இசை மூலம் சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் கோகுல்ராஜ்..
காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கம் இருந்து பார்த்திருக்கும் படம்.. பெண்களின் உணர்வுகளை மதிக்கும் படமாக உருவாக்கி உள்ளனர்.
கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கூட இந்த படத்தில் வரும் கடவுளை பார்த்தால் ரசிக்கும்படி உருவாக்கிய இயக்குனர் பாலு சைலாஸ் அவரை பாராட்டலாம்.
ஆக மொத்ததில் இந்த குறும்படம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைப்பால் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது… கடைசி பத்து நிமிடம் சிறப்பு… கண்டிப்பாக இந்த மகளிர் தினத்தில் பெண்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு அழகிய குறும்படம் நிச்சயம் பார்க்கலாம்.

#actor vimal#anisha#fakeid movie#New film#Tamil movie#ungal cinemacinema news
Comments (0)
Add Comment