மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!

ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது!

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது

திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

லிங்க் – https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g

Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்கிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் ஒன்றாக மோதும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக, மனித உறவுகளின் தீவிரமான கதையாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாமல், நடிப்பு, காட்சிகள் மற்றும் இசை மூலமாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு முழுமையான மற்றும் மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”

அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”

இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.”

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் மார்ச் 6 முதல் ZEE5-ல் தவறாமல் காணுங்கள்!

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

#actor vijay sethubathi#aravindh samy#athithi rav#gandhi talks movie#New film#new release#Tamil movie#ungal cinema#zee5 ottcinema news
Comments (0)
Add Comment