‘கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!

குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’.

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார்.

கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி, மீனா சப்ரியா பேசியதாவது, “கோடைகால சிறப்பு வகுப்புகளும் இங்கு நிறைய தொடங்க இருக்கிறோம். ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்றவற்றை குழந்தைகளை எண்டர்டெயின் செய்யும் விதமாக டிப்ளமோ கிளாஸஸ் எடுக்க இருக்கிறோம். இங்கு கட்டணம் எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட ரூ. 400 மதிப்பிலான புத்தகத்தை வாங்கி நீங்கள் அதில் பயிற்சி பெறலாம். இந்தியாவில் முதன் முறையாக 34-க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் ஒரு டிரெயினிங் மாடல் இங்கு இருக்கிறது. குழந்தைகளின் படிப்பிற்கென்று பொருட்கள் விற்பனையாகும் இந்தியாவின் முதல் ஸ்டோர் இதுதான். 3300 சதுர அடியில் அமைந்திருக்கிறது. அடுத்த வருடம் ஐந்து ஸ்டோர் இந்தியாவில் தொடங்க இருக்கிறோம். கற்றலும் குழந்தைகளின் மகிழ்ச்சியுமே ‘கலர் பென்சிலி’ன் நோக்கம்” என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு பேசியதாவது, “இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நான் உள்ளே வரும்போதே நிறைய குழந்தைகள் குதூகலமாக இந்த ஸ்டோரில் இருந்ததை பார்க்க முடிந்தது. இது தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

கலர் பென்சில் பிராண்ட் அம்பாசிடர், மைக்செட் ஸ்ரீராம் பேசியதாவது, “சென்னையில் மிகப்பெரிய முயற்சியாக ‘கலர் பென்சில்’ தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துக்கள்! அறிவும் மொழியும் குழந்தைகள் சிறப்பாக வளர முக்கியமான விஷயங்கள். அதை அனுபவத்தின் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வது சிறப்பான விஷயம். என்னை கலர் பென்சிலின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததற்கு நன்றி” என்றார்.

#actor micset sriram#celebrity events#color pencil store opening#ungal cinema#vanibojancinema news
Comments (0)
Add Comment