தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதுடன்.. ஆன்மீகத்தின் ஆழமும் காட்சி மொழிகளில் கலந்திருக்கிறது.

முன்னணி நட்சத்திர நடிகரான ‘டோலிவுட் பிரின்ஸ்’ மகேஷ்பாபு இப்படத்தின் டீசரை வெளியிட்ட உடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏராளமான உற்சாகத்துடன் புதிய உயரங்களுக்கு உயர்ந்தது. அத்துடன் நாடு முழுவதும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு அலையையும் உண்டாக்கியது.

மர்மங்கள் அடங்கிய இமயமலையின் பனி படர்ந்த பரப்பில் அமைக்கப்பட்ட இந்த டீசர்.. காலத்தை விட பழமையான ஒரு ரகசியம் புதைந்து கிடக்கும் ஒரு உலகத்தின் நுழைவாயிலை திறக்கிறது. ஒரு மனிதனின் பேராசை இந்த பிரபஞ்ச உண்மையை அம்பலப்படுத்த அச்சுறுத்தும் போது.. விதி அதன் போர் வீரனை தேர்ந்தெடுக்கிறது.

அப்தாலி தலைமையிலான வரலாற்று ரீதியான ஆப்கானிய படையெடுப்பால் ஓரளவு ஈர்க்கப்பட்ட இந்தக் கதை, புராணம், வரலாறு மற்றும் ஆன்மீகப் போர் ஆகியவற்றை இணைத்திருக்கிறது. கலாச்சார எதிர்ப்பு மற்றும் தெய்வீக பாதுகாவலர் ஆகியவற்றின் சந்திப்பில்.. நடைபெறும் மோதல் வடிவத்தை முன்னிறுத்துகிறது.

இந்த காவியத்தின் மையத்தில் புனிதமான நாகபந்தம் கோயில் உள்ளது‌. இது – வான சக்திகளால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பண்டைய அண்ட சக்தியை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. ரகசியமான இமயமலை பாதைகளுக்குள் ஆழமாக அமைந்திருக்கும் இந்தக் கோயில் , தவறானவர்களின் கைகளில் விழுவது கற்பனை செய்ய முடியாத பேரழிவைத் தூண்டும் அளவிற்கு மகத்தான சக்தியை கொண்டுள்ளது.

பிரம்மாவின் படைப்பிலிருந்து பிறந்து … விஷ்ணுவின் தர்மத்தால் பாதுகாக்கப்பட்டு … மகா தேவ்- வின் கோபத்தால் இயக்கப்படுகிறது… இந்த குறிப்பிடத்தக்க வரிகள்… நாகபந்தத்தின் ஆன்மாவை மிகச் சரியாகப் படம் பிடிக்கிறது. தெய்வீகம்- விதி மற்றும் அழிவு ஆகியவை மோதும் ஒரு சரித்திரம் தான் இது.

இயக்குநர் அபிஷேக் நாமா- துணிச்சலான இலட்சியத்தையும், தெளிவான பார்வையையும் வெளிப்படுத்துகிறார். விதிவிலக்குடைய தொழில்நுட்ப செயலாக்கத்தால் உயர்த்தப்பட்ட அவரது புராணம், செயல் மற்றும் ஆன்மீக ஆழம் ஆகியவற்றின் கலவை..இந்த நாகபந்தம் படத்தின் டீசருக்கு ஒரு மகத்தான அனுபவத்தை வழங்குவதில் உறுதி அளிக்கிறது. அத்துடன் ஒரு சக்தி வாய்ந்த சினிமாவுக்கான அடையாளத்தையும் அளிக்கிறது. ஒரு உரையாடல் கூட இல்லாமல்… டீசர் அதன் வெளிப்படையான காட்சி மொழி ஆற்றல் மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.

முதல் ஃபிரேமில் இருந்து நாகபந்தம், ஒரு பிரம்மாண்டமான காட்சி காவியமாக நிலை நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன். எஸ் வியக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளை அற்புதமான நேர்த்தியுடன் படம் பிடித்து உயர்தரமான வி எஃப் எக்ஸ் அளவையும், காட்சியையும் மேம்படுத்துகிறார்.

காட்சிப்படுத்தலுக்கு உறுதுணையாக அசோக் குமாரின் தயாரிப்பு வடிவமைப்பு – ஜுனைத் குமாரின் பிரமிப்பூட்டும் பின்னணி இசை மற்றும் R C பிரணவின் நேர்த்தியான எடிட்டிங் ஆகியவை பார்வையாளர்களின் பக்தி, போராக மாறும் மற்றும் நம்பிக்கை கோபமாக மாறும் ஒரு பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.

தயாரிப்பாளர்களின் முதல் தயாரிப்பாக இருந்தாலும் படைப்பிற்கான சமரசமற்ற அணுகுமுறை படம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. இயக்குநர் அபிஷேக் நாமாவின் இலட்சியப் பார்வையை வலிமையாக ஆதரித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான அரங்கங்களை அமைப்பதில் இருந்து… வி எஃப் எக்ஸ் மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பத் துறையிலும் விரிவாக – ஆழமாக கவனம் செலுத்துவது வரை.. படத்தின் தயாரிப்பு மதிப்புகள், இந்திய சினிமாவின் அளவுகோல்களை மறு வரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்

கதையை வழிநடத்தும் விராட் கர்ணா ஒரு கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் அவதாரத்தில் காட்சி தருகிறார். அவரது கட்டளையிடும் தோரணையுடன் கூடிய திரை இருப்பு குறிப்பாக முதலையுடனான சண்டைக் காட்சிகளை விட அதிர்ச்சியூட்டும் வகையில் சிவனாக தோன்றுவது டீசரின் சிறப்பு அம்சமாகும். சிவனை சித்தரிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் விராட் கர்ணா அந்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துகிறார். தீவிரம்- உடல் மாற்றம் – உணர்வுபூர்வமான ஆழம் – ஆகியவை என ஒரு வாழ்க்கையை வரையறைக்கும் நடிப்பை குறிக்கின்றன.

நடிகர்களின் தேர்வு – இப்படத்தின் மற்றொரு முக்கிய பலம் என சொல்லலாம். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்சரேக்கர், ஜெகபதி பாபு , ரிஷப் சாவ்னி, கருடா ராம், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா ,அனுசுயா பரத்வாஜ் மற்றும் பி. எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருவதால்… ‘நாகபந்தம்’ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, அதற்கு படத்தின் டீசர் தான் அறிகுறி. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நம்பிக்கை- சீற்றம் மற்றும் விதி.. ஆகியவற்றை ஒரு காவிய அளவிலான மறக்க முடியாத சினிமா பயணத்திற்காக பார்வையாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த டீசர் ஹைதராபாத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரசாத் PCXல் திரையிடப்பட்டது. வாழ்க்கையை விடப் பெரிய கதை சொல்லலால் இந்த டீசர் எதிர்பார்த்ததை விட கூடுதலான பாராட்டுகளைப் பெற்றது. டீசரைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினர்.

இந்த கோடையில் தர்மம் உயர்ந்து.. அழிவு நடுங்கும் வகையில்..ஒரு காலமற்றப் போரை காணத் தயாராகுங்கள்.

நடிகர்கள் :

விராட் கர்ணா , நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ரிஷப் சாவ்னி, ஜெகபதி பாபு , கருடா ராம், மகேஷ் மஞ்சரேக்கர் , ஜெயப்பிரகாஷ் ,முரளி சர்மா, அனுசுயா பரத்வாஜ், பி. எஸ் .அவினாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு :

கதை ,திரைக்கதை, இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள் : கிஷோர் அன்னபுரெட்டி & நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு : சௌந்தர்ராஜன் .எஸ்
இசை : அபே – ஜுனைத்குமார்
தயாரிப்பு வடிவமைப்பு : அசோக் குமார்
படத்தொகுப்பு : R C பிரணவ்
CEO : வாசு பொதினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

TEASER LINK : https://www.youtube.com/watch?v=HL7o-miHgDU

#actor virat karna#ciema news#First look#nagabantham movie#New film#Tamil movie#teaserr launch#ungal cinema
Comments (0)
Add Comment