சீதா பயணம் திரைப்பட விமர்சனம்

சீதா பயணம் திரைப்பட விமர்சனம்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும பலர் நடித்து வெளிவந்துள்ள படம் சீதா பயணம்.

கதை

சீதா(ஐஷ்வர்யா அர்ஜுன்) அம்மாவை சிறு வயதிலெயே இழந்து தன் அப்பா சத்யராஜ் வளர்ப்பில் நன்றாக வளர்ந்து பெரிய இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு நாள் சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றிற்கு செல்கிறார்.
செல்லும் வழியில் நாயகன் நிரஞ்சனை சந்திக்கிறார், அவர் தன் ஊருக்கு போக லிப்ட் கேட்க, சீதாவும் லிப்ட் கொடுத்து அவருடன் பயணிக்கிறார். அப்படி செல்லும் வகையில் டீக்கடை, ஸ்கூல் குழந்தைகள், ரோட்டில் பழம் விற்பவர் என அனைவரையும் சந்தித்து நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.அப்படி அவர் ஒர்க் ஷாப் பில்டிங் அருகில் செல்லும் போது கேஸ் லீக்கேஜால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, ஐஸ்வர்யா அர்ஜுன் நொடி பொழுதில் உயிர் தப்பிக்கிறார்.
இதனால் ஒரு முடிவுக்கு ஐஸ்வர்யா வருகிறார், அது என்னவென்றால் தான் 20 நொடி தாமதமாக வர, பலரும் தன்னை தடுத்து நிறுத்தினார்கள், அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என சீதா பயணத்தை தொடங்க பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை

ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், ஹீரோவாக வரும் நிரஞ்சன் நடிப்பும் அருமை.
அர்ஜுன் கெஸ்ட் ரோலில் வந்து கலக்குகிறார். துருவ சர்ஜா, கோவைசரளா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ் என இதில் நடித்நிருக்கும் அனைவரும் அவரவர் கதிபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாலமுருகன் ஒளிப்பதிவு படத்தற்கு பெரிய பலம். மெலோடி கிங் அனுப் ரூபென் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

இயக்குநர் நடிகர் ஆர்ஜுன் அழகான காதல் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

#Aishwarya arjun#New film#new release #movie review#seetha payanam movie#Tamil movie#ungal cinemacinema newssathyaraj
Comments (0)
Add Comment