ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகி பிபாரவரி 13ல் வெளியாகவுள்ள படம் மை லார்ட் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.
கதை
அதிகார போதை கொண்ட மத்திய மந்திரியான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய சூழ்நிலை நேர்கிறது. ஆனால் அவரது ரத்த வகை அரிதானதாக இருக்க, சிறுநீரக தானம் பெறுவதற்கான பெரும் தேடலில் இரண்டு பேரைத் தேர்வு செய்கிறார்கள். அந்த இருவருள் ஒருவர் சசிகுமார்.
வெளியுலகுக்கு ஆஷா சரத் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். இந்த ஆபரேஷனை ரகசியமாக நடத்த முடிவெடுக்கிறார்கள்.இதற்காக கோவில்பட்டியில் இருக்கும் சசிகுமாரைக் கூட்டி வந்தார்களா? . ஆஷா சரத்துக்கு சசிகுமார் தனது கிட்னியை கொடுத்து அவரது உயிரை காபாபாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி வரிசையில் சசிகுமார் நடித்த தரமான படம். இந்த படத்திலும் சசிக்குமார் சிறப்பாக நடித்துள்ளார். கதநாயகியாக சைத்ரா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். குரு சோமசுந்தரம் பத்திரம் அருமை. அதை சிறப்பாக செய்துளளார். நீதிபதியாக ஜெயப்பிரக்ஷ் வக்கீலாக கோபி, நயினார், மந்திரியாக ஆஷா சரத் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாததிரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.
மனிதர்கள் இறக்கிறார்கள் – ஆனால் மனிதம் மரிப்பதில்லை.! என்பதை ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி,ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் ‘மை லார்ட்’ படத்திலும் அழகாக சொவ்லி எல்லோரும் ரசித்து பார்க்கும்படி நல்ல நரமான படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.