” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” திரைவிமர்சனம்

கோவை ரமேஷ் தயாரிப்பில் G ராஜசேகர் இயக்கத்தில்
த்ரிகுண்,
ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா ராதா, ரவி மரியா, தம்பி ராமைய்யா,, சத்யன் ஜாவா சுந்தரேசன்,, மதன்பாபு,, விஜய் டிவி தனசேகர்,, வினோத்
பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு., ராதா மற்றும் பலர் நடித்து நடித்து பிப்ரவரி 13 ல் வெளியாகும் படம் ஸ்வீட்டி நாட்டி கிரேசிஃ

கதை

கதாநாயகன்(த்ரிகுண்) கல்லுரியில் படிக்கிறான். அந்த கல்லுரியில் முதல் வருடம் சேர்ந்து தன்னிடம் கணக்கு பாடம் கற்க வந்த கதாநாயகியை
(ஸ்ரீ ஜீத்தா கோஷ்) காதலித்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு டேட்டிங்கிற்காக ஏற்காடு சென்று அவளுடன் சந்தோஷமாக கன்னி கழிந்து விடுகிறார். பின் அழுகிறார். ஏன் என்று கேட்க கதாநாயகன் டயூஷன் படிக்கும்போது டியூஷன் டீச்சருடன்(இனியா) தப்பு பண்ணிவிட்டேன் என்று சொல்ல ஷாக் ஆன கதாநாயகி அவனை பிரேக்கப் செய்கிறாள். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து டேட்டிங்கிற்காக மறுபடியும் ஏற்காடு வருகிறார்கள். அந்த சமயம் லீலில் நண்பனை பார்க்க் வெளியூர் சென்றபோது ஒரு ஆண்டியுடன்(சுந்தரா டிராவல்ஸ் ராதா) செக்ஸ் வைத்துக்கொண்டதாக சொல்ல அதிர்ந்த கதாநாயகி முதலில் என்னை கல்யாணம் பண்ணிணால்தான் தப்பு பண்ணமாட்டாய் ஏன்று சொல்லி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்கிறாள். அவனை அழைத்துக்கோண்டு அவள் வீட்டிற்கு அழைத்து செல்கிறாள். வீட்டிற்கு சென்றால் செக்ஸ் வைத்துக்கொண்ட டியூஷன் டீச்சர் கதாநாயகியின் அக்கா ஆண்ட்டி கதாநாயகியின் அம்மா அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக த்ரிகுண் கதநாயகியாக ஸ்ரீ ஜீத்தா கோஷ் டியூஷன் டீச்சராக இனியா,இவருக்கு கணவராக சத்யன் ஆண்ட்டியாக சுந்தரடிராவல்ஸ் ராதா இவருக்கு கணவராக தம்பி ராமைய்யா, வீட்டு வேலைக்காரி இவருக்கு கணவராக பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு, ஹாஸ்டர் வார்டனாக ரவிமரியா, ஜோதிடராக ஜாவா சுந்தரேசன், டாட்டராக மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து டபுல் மீனிங் பேசி படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.
C. விஜய ஸ்ரீயின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
அருணகிரியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
K. குமாரின் எடிட்டிங் ஷார்ப்.

இயக்குநர் ராஜசேகர்.G அடல்ட் கதையை எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி டபுல் மீனிங்குடன் இளைஞர்கள் கொண்டாடும் வகையில் கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

#New film#new release#sweety naught crazy movie#Tamil movie#ungal cinemacinema newsmovie review
Comments (0)
Add Comment