இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘திரௌபதி 2’
கதை
திருவண்ணாமலையை மையமாக வைத்து வரலாற்று பின்னணியில் நிகழ்ந்த உண்மை சம்பவமே கதை.
வாத்தியார் பிரபாகரன்(ரிச்சர்ட்) மனைவி இழந்து, மகளை அன்பாக வளர்த்து வர, அவருக்கு ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி ஒருவர் வருகிறார்.
அதன் பின்பு ஊர் கோவில் பராமரிப்பு சரியாக இல்லாததை அறிந்து அதை தான் செய்வதாக ஒரு பெண் வர, அந்த கோவிலுக்கு சென்றது அந்த பெண் பல நூற்றாண்டு முன் வாழ்ந்த திரௌபதியாக மாறி கதை சொல்ல ஆரம்பிக்கிறார். கதையில் வீர வள்ளலார் பார்வையில் காடவராயன்(ரிச்சர்ட்) வளர்கிறார்.
அப்போதும் மதுரையில் உள்ள கில்ஜி படை மக்களை மதம் மாற சொல்லி கொடுமைகளை செய்து வருகின்றர். அதே போல் டெல்லியில் இருக்கும் துக்ளக் பார்வையும் தமிழகத்தில் விழ, அவரும் இங்கு வருகிறார்.
வீர வள்ளலார் ஒரு கட்டத்தில் எதிரிகளின் துரோகத்தால் இறக்க, அவர்களை பழிவாங்கி மக்களை காக்கும் பொறுப்பு காடவராயனுக்கு வருகிறது. காடவாராயன் துக்ளக், கில்ஜி என பல எதிரிகளை கொன்று மக்களை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் ரக்ஷனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டி நட்ராஜின் நடிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்குபெரிதும் உதவி இருக்கிறது.
சிராக் ஜானி, தினேஷ் லம்பாவின் கதாபாத்திரங்கள் அருமை. திவி, தேவயானி சர்மா, வேலராமமூர்த்தி, பரணி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா என இதில் நடித்நிருக்கும் அனைவரும் அவரவர் கதாப்த்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்
பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்டு
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நல்ல கதையை காவியமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. பாராட்டுக்கள்.