வங்காள விரிகுடா திரைவிமர்சனம்

வங்காள விரிகுடா திரைவிமர்சனம்

குகன் சக்ரவர்த்தி தயாரிப்பு நடிப்பு இசையில் அலினா,
பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம், டிப் லேனா, பிரபாத் சிங், அலிஷா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வங்காள விரிகுடா.

கதை

குகன் சக்ரவர்த்தி அண்ணாச்சியாக இருந்து ஊர் மகளுக்கு நல்லது செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் குகன் சக்ரவர்தியார் நண்பர் வாசு விக்ரமின் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகளை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். இதனால் மாணவிக்கு குகன் சக்ரவர்த்திமீது காதல் ஏற்பட்டு கல்யாணமும் இருவருக்கும் நடக்கிறது. மறுபுறம் தான் காதலித்த பெண்ணுக்கு அவரது கணவனால் தொல்லை ஏற்பட குகன் சக்ரவர்த்தி தன் ஆட்களை வைத்து அவரை கொலை செய்து தன் காதலிக்கு பாது காப்பு கொடுக்கிறார். செத்த காதலியின் கணவன் காதலி செல்லுக்கு போன் வர யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க முயல்கின்றனர் காதலியும் குகன் சக்ரவர்த்தியும். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

குகுன் சக்ரவர்த்தியார் நன்றாக நடித்திருப்பதோடு இசை பாடல் என்று பல கிராப்டுகளை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அலினா,
பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம், டிப் லேனா, பிரபாத் சிங், அலிஷா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பல கிராப்டுகளை கையாண்டு எல்லோரும் ரசிக்கும்படியாக
அப்துல்கலாம் போல் நல்லவனாக வாழவேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கும் இயக்குநர் குகுன் சக்ரவர்த்தியாருக்கு பாராட்டுக்கள்.

#New film#new release#Tamil movie#unga cinema#vangala viriguda moviecinema newsmovie review
Comments (0)
Add Comment