தலைவர் தம்பி தலைமையில் திரைவிமர்சனம்

தலைவர் தம்பி தலைமையில் திரைவிமர்சனம்

கண்ணன் ரவி தயாரிப்பில் நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில் ஜீவா,பிரார்த்தனா, தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்து வெளியாஙியிருக்கும் படம் தலைவர் தம்பி தலைமையில்.

கதை

ஊர் தலைவராக இருக்கிறார் கதாநாயகன் ஜீவா. அந்த ஊரில் நல்லது கெட்டது எதுவென்றாலும் இவர் தலைமலயில்தான் நடைபெறும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் இளவரசு மகள் திருமணத்தை நடத்ததும் வேளையில் இளவரசு பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி ராமைய்யா அப்பா இறந்து விடுகிறார். ஜீவா தம்பி ராமைய்யாவிடம் சென்று கல்யாணம் காலை 10.30 முடிந்த பிறகு அப்பா சாவு வேளையை பார்க்கலாம் என்று சொல்ல ஏற்கனவே இளவரசு மேல் உள்ள பகையில் கல்யாணம் நடக்கும் அதே காலை 10.30க்குதான் அப்பா சாவையும் எடுக்கவேண்டும் என்று அடம்பிடிக்க இவர்கள் இருவரிடமும் மாட்டிக்கோண்டு ஜீவா மாட்டிக்கொண்டு முழிக்க அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.

ஊர்தலைவர் கதாபாத்திரத்தில் ஜீவா நடிப்பில் பட்டைய கிளப்பி உள்ளார். இளவரசு, தம்பி ராமைய்யா இருவரும்ஃபோட்டி போட்டுக்கோண்டு கொடுத்த கதாபாத்நிரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
பிரார்த்தனா, ஜென்சன் திவாகர்
என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடிந்துள்ளனர்.
விஷ்ணு விஜயின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவும் அருமை.

இயக்குநர் நிதிஷ் சஹதேவ் எல்லோரும் ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

#actor jeeva#New film#new release#tamil mmovied#thalaivar thambi thalaimail movie#ungal cinemacinema newsmovie review
Comments (0)
Add Comment