கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.


இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே‌.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

#kavathai release#ungal cinemacinema news
Comments (0)
Add Comment