ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!!

*”தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன் எழுதிய சரக்கு ஸாங்!*

*” லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு…..பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ் மார்க்கு….”!!*

சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஸ்டைலான குத்து பாடலை இயக்குநர் ஆதிராஜன் எழுதியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் நடனமங்கை ஒருத்தி அனைத்து விதமான மதுபானங்களையும் தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போன்ற அந்த பாடல்
” லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு…..பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ்மார்க்கு….கண்ணு ரம்மு கண்ணம் ஜின்னு நாட்டு சரக்கு நடந்து வந்தாளே…. ஸ்மைலு பிரீஸர் ஸ்டைலு வோட்கா லிப்பு ரெண்டில் ஒயினு தந்தாளே….” என்று தொடர்கிறது. இந்த பாடலை ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’
ஸ்ரீநிஷா சீனிவாசன் கிக் ஏற்றும் குரலில் பாடி இருக்கிறார். இவர் “அரண்மனை-4” படத்தில் தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் சூப்பர் ஹிட்டான “அச்சோ அச்சோ அச்சச்சோ….” உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “இந்த சரக்கு சாங் நிச்சயமாக பெரிய அளவில் வைரலாகும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் ஸ்ரீநிஷா.

பல படங்களில் நாயகியாக நடித்த மேக்னா நாயுடு இந்த பாடலுக்கு செமத்தியாக கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். எம்.ஜி கார்த்திக் இசையில் உருவான இந்த பாடலுக்கு மாஸ்டர் சிவகுமார் நடனம் அமைத்திருக்கிறார்.


பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிஓவியம் தீட்டிய ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை “கேஜிஎப்” படப்புகழ் ஸ்ரீகாந்த் கையாண்டிருக்கிறார். மற்ற பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார்.


விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் “தீராப்பகை” விரைவில் திரைக்கு வருகிறது.

#cinema new#item song#New film#new launch#new song#srinesha jeyaseelan#Tamil movie#theerappagai movie#ungal cinema
Comments (0)
Add Comment