ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில்
ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பராசக்தி
கதை
ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன் அழிக்க போராடுகிறார். படத்தின் ஓப்பனிங்கிலே இரயிலை எரிக்கிறார். இதை தடுக்க ரவிமோகன் போராடி தோற்க சிவகார்த்தியனையும் அவரது கும்பலையும் பிடிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.
ரயில் எரப்பு சம்பவத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இறக்க, இனி இந்த வன்முறை, ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் கைவிட்டு ரயிலில் கரி போடும் வேலை பார்த்துக் கொண்டே தம்பி அதர்வாவை இன்ஜினியரிங் படிக்கவைக்கிறார். அதர்வாவோ அண்ணனைப் போன்று ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நண்பர்கள் குழுவுடன்
போராடிக்கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில்
சிவகார்த்திகேயன் ஹிந்தி படித்து டெல்லிக்கு வேலைக்கு வருகிறார். வந்த இடத்தில்
அதர்வா செயலை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அதர்வாவுக்கு புத்தி சொல்கிறார்.
வேலைக்கான நேர்கானலில் ஹிந்தி படித்தால்தான் இனி வேலை என்ற நிலை உருவாக, சிவகார்த்திகேயன் வருத்தப்படுகிறார். இந்த சூழ்நிலையில்
அதர்வா ஹிந்தி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டருக்கும் சூழ்நிலையில் அதர்வாவை காப்பாற்றி தானும் ஹிந்தி போராட்டத்தில் களம் இறங்குகிறார். அதர்வாவும் லீலாவும் சிவகார்த்திகேயன் யார் என பிளாஷ்பேக் தெரிந்து கொள்ள அதன்பிறகு சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து
மீண்டும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். அதில் அவர்கள் வென்றார்களா? இல்லையா? அரசு அதிகாரியான ரவிமோகன் இவர்களின் திட்டத்தை முறியடிதாதாரா? இல்லையா? என்ற புரட்சி போராட்டமே பராசக்தி படத்தின் கதை.
சிவகார்த்திகையன் செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான அதிகாரியாக ரவிமோகன் சிறப்பாக நடித்துள்ளார்.
அதர்வா கல்லூரி மாணவனாக நடிப்பில் மிரட்டியுள்ளார்.
ஸ்ரீலீலா தமிழுக்கு அறிமுகம் அழகாலும் நடிப்பாலும் கவர்கிறார்.
தேவ் ராம்நாத், காளி வெங்கட், பிரித்வி பண்டியராஜன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துளளனர்.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்தை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ்ஷின் 100வது படம் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம்.
1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்களின் கதையை கருவாக கொண்டு அதை எல்லோரும் ரசிக்கும்படி திரைக்கதையமைத்து சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. பாராட்டுக்கள்
மதிப்பெண் 4/5