வெற்றிபெற்ற  “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும் டிசம்பர் 24 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

*இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் !  – “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!*

இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை   கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ்,  எனும் தமிழ் காமெடி – டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், காளி வெங்கட், முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“மிடில் கிளாஸ்” திரைப்படம், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட நடைமுறை சிக்கல்களை, ஒரு மனிதன் நீண்ட காலமாக சுமந்து வந்த கனவை அடைய முயலும் பயணத்தை, நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து சொல்லுகிறது. ஆசைகள், அழுத்தங்கள், குடும்ப உறவுகள் மற்றும் குழப்பங்கள் இவை அனைத்தையும் இயல்பாகப் பிரதிபலிக்கும் இப்படம், சிரிப்போடு சேர்த்து மனதையும் நெகிழ வைக்கிறது.

கதையின் மையத்தில், சாதாரண மனிதர்களின் ஆசைகள்,  ஒரு குடும்பத்தின் அன்றாட  இயக்கங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெறுகின்றன. அதிகமாக வெளிப்படுத்தாமல் சொல்ல வேண்டுமெனில், கனவும் நிஜமும் மோதும் இடங்களில் உருவாகும் சூழல்கள், சில சமயம் கலகலப்பாகவும், சில சமயம் மனதைத் தொடுவதாகவும் அமைகின்றன. எளிமையும் உண்மையும் தான் இப்படத்தின் பலம்.

இப்படம் குறித்து முனிஷ்காந்த் கூறியதாவது..,
“மிடில் கிளாஸ்” படம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளை பிரதிபலிப்பதால், பார்வையாளர்களுடன் எளிதாக இணையும். இப்படத்தின் நகைச்சுவை நிஜமான வாழ்க்கையிலிருந்து வருகிறது. அது தான் இப்படத்தை சிறப்பாக்குகிறது. என் கதாபாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நகைச்சுவைக்கு  இணையாக உணர்ச்சிப்பூர்வமான தருணங்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்த பண்டிகைக் காலத்தில் ZEE5-ல் படம் வெளியாகிறது என்பது பெரும் மகிழ்ச்சி.”

இந்த கிறிஸ்துமஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத்  தவறவிடாதீர்கள் — டிசம்பர் 24 முதல் ZEE5-ல் மட்டும்.

#actor muneesh kantth#middle class movie#New film#Tamil movie#ungal cinema#vijayalakshmi#zee5 ott#zee5 streamingcinema news
Comments (0)
Add Comment