*ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!*

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.

Link – https://www.youtube.com/watch?v=vTEzXB8cyGs

‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள்.
24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள் —ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்றது என்று நினைக்கும் மனிதன் அவன். அறிவியல் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? காதலின் மொழியை அறிவியல் மொழிபெயர்க்க முடியுமா? என்பதைக் கேட்கும் ஒரு இனிமையான, சுவாரஸ்யமான பயணம் இதுவாகும்.

நடிகர் குரு லக்ஷ்மன் கூறியதாவது..,
“சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’ ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.”

பாதினி குமார் கூறியதாவது..,
“சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்—தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது.”

ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் பிசினஸ் ஹெட் மற்றும் SVP மார்க்கெட்டிங் சவுத் லாய்டு சி சேவியர் கூறியதாவது..,
‘ஹார்டிலே பேட்டரி’ அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது. புதிய கதைக்களங்களையும் உணர்ச்சிமிக்க காட்சிப்படுத்தல்களையும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்றுள்ளனர். இந்த சீரிஸில் இருக்கும் புதுமையும், உணர்வுகளும் ஒருங்கிணைந்து, இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கும்.”

டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!

#actor guru lakshman#heartly battery#new series#paadini kumar#ungal cinema#zee 5 streaming. #new seriescinema news
Comments (0)
Add Comment