நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம்

ராதாகிருஷ்ணன்
தயாரிப்பில்
இயக்குநர் எஸ் கார்த்தீஸ்வரன் கதை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருடன் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்,
மிருதுளா சுரேஷ், ஆதவன்,
லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, அகல்யா வெங்கடேசன்
மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நிர்வாகம் பொறுப்பல்ல.

கதை

நாயகன் கார்த்தீஸ்வரன் ஒரு லட்சத்துக்கு மாதம் 10000 தர்ரேன் என பல ஸ்கீம்களை சொல்லி மக்களை ஏமாற்றுகிறான். அதன் பின் 250 ருபாய்க்கு செல்போன் தருகிறேன் என்று சொல்லி பல கோடி வசூல் செய்து ஏமாற்றுகிறான். இப்படி பல வழிகளில் மோசடி செய்து தன் சகாக்களுடன் சேர்ந்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? , அவர் செய்த மோசடிகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார்? அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ? மக்களிடம் ஏம்ற்றி வசூல் செய்த 5000 கோடியை என்ன செய்தார்? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் நடனத்திலும், சண்டைக்காட்சியிலும் சிறப்பாக நடித்துளாளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கொடுத்த கதாபாத்நிரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்,
ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
என்.எஸ்.ராஜேஷின்
ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் அருமை. சஜின்.சி, எடிட்டிங் ஷார்ப்

இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன் இன்று மக்கள் பல வழிகளில் ஏமாறுவதை கதையாக எடுத்துக்கொண்டு அதை திரைக்கதையின் மூலம் சுவாராஸ்யமாக சொல்லி மோசடிகளில் மக்கள் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார்.. பாராட்டுக்கள்

#New film#new release#nirvagam porupalla movie#Tamil movie#ungal cinemacinema newsmovie review
Comments (0)
Add Comment