*கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கினார்*
தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் புதன்கிழமை (நவம்பர் 26) மாலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை (Dr Mrs YGP Award of Cultural Excellence) வழங்கி கௌரவித்தார். திருமதி கல்யாணி வெங்கட்ராமன் நினைவாக திரு வெங்கட்ராமனால் இந்த விருது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களுடன் நீண்டகாலம் பணியாற்றிய திருமதி சுந்தரி சங்கரன், திருமதி சந்திரா ரமணி மற்றும் திருமதி விஜி கண்ணன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
நாட்டிய நிபுணர் டாக்டர் பத்மா சுப்ரமணியம், வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷ், வயலின் கலைஞர் லால்குடி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினர். நடிகர் ஏ ஆர் எஸ் காணொலி மூலம் உரையாற்றினார். ஒய் ஜி மதுவந்தி வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒய் ஜி மகேந்திரா மற்றும் சுதா மகேந்திரா தலைமையிலான பாரத் கலாச்சார் ஆலோசனைக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
***