இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

*இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்!*

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து படத்தின் வெளியீட்டை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ‘அவதார்’ படத்தின் மீது இந்தியர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவுகளில் ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படத்தில் சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) மற்றும் ஜோ சல்டானா (நெய்திரி) உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதோடு புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறது. கதையின் புதிய நடிகர்களில் ஊனா சாப்ளின், ‘ஆஷ் பீப்பிள்’ குலத்தின் தலைவரான வராங்காக நடிக்கிறார்.

20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்த படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

#avatar#fire and ash#new launch#ungal cinemacinema news
Comments (0)
Add Comment