*நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!*

*நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!*

யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் ‘டெக்சாஸ் டைகர்’ – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.

யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், ‘ஃபேமிலி படம்’ புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் ‘டெக்சாஸ் டைகர்’. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் (‘ட்யூட்’, ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’, ‘முரா’ ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதும் இணையத்தில் டிரெண்டாகி ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*
தயாரிப்பு: பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித்,
தயாரிப்பு பேனர்: யுகே ஸ்குவாட்,
எழுத்து, இயக்கம்: செல்வகுமார் திருமாறன்,
இசை: ஓஷோ வெங்கட்,
ஒளிப்பதிவு: விஷ்ணு மணி வடிவு (ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் அசோசியேட்),
படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி,
கலை இயக்கம்: கே.பி. நந்து,
சண்டைப் பயிற்சி: சுகன்,
பாடல் வரிகள்: கெலித்தி, ஆதவன் தமிழ், ரிதுன் சாகர், ஆ.பா. ராஜா,
பாடல்: தெருக்குரல் அறிவு, கெலித்தி, சுபலாஷினி, ஆதவன் தமிழ் மற்றும் அந்தோணி தாசன்,
ஆடை வடிவமைப்பு: மரியா மிலன்,
பப்ளிசிட்டி: தினேஷ் அசோக்.

#First look#New film#Tamil movie#teksas tiger#ungal cinemacinema news
Comments (0)
Add Comment