யெல்லோ திரைவிமர்சனம்

Covai Film Factory’ சார்பில், பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன், இயக்குநர் பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் மற்றும் பலர் நடித்து நவம்பர் 21 ல் வெளியாகும் படம் யெல்லோ.
பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், கிளிஃபி கிரிஸ். பின்னணி இசையமைத்திருக்கிறார், ஆனந்த் காசிநாத். ஒளிப்பதிவு அபி ஆத்விக்

கதை

உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான (BITS Pilani) பிட்ஸ் பிலானியில் சேர்ந்து பயில்வதை கனவாகவும், லட்சியமாகவும் கொண்டு அதற்காக கடுமையான பயிற்சிகளை, (பூர்ணிமா ரவி) ஆதிரையும், அவரது காதலர் (சாய் பிரசன்னா) சந்தோஷூம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆதிரையின் அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாததால் குடும்ப பொறுப்பினை ஆதிரை ஏற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் காதலையும் ஏற்க முடியாத சூழ்நிலையில் காதலித்தவனை விட்டு விலகுகிறார்.
இப்படி சென்றிருக்கும் வாழ்க்கை சூழ்நிலையில் அழுத்தம் கொடுக்கும் வேலை. ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது. இதன் காரணமாக, ஆதிரை தன்னுடைய சிறு வயதில் பழகிய நான்கு நபர்களை தேடிச் செல்கிறார். அவர்களை ஆதிரை சந்தித்தாரா? அதனால், அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே ‘யெல்லோ’ படத்தின் மீதிக்கதை.

ஆதிரையாக பூர்ணிமா ரவி சிறப்பாக நடித்திருக்ஙிறாரா. சாயாக வைபவ் முருகேசன் நடிப்பும் அருமை. பூர்ணிமா ரவியின் அப்பாவாக டெல்லி கணேஷ் பிரபு சாலமன்., லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பாடல்களுக்கான இசையை கிளிஃபி கிரிஸ்ஸும். பின்னணி இசையை , ஆனந்த் காசிநாத்தும் ரசிக்கும்படி கொடுத்துள்ளனர். அபி ஆத்விக்கின்
ஒளிப்பதிவுதான் படத்திற்கு பெரிய பலம். அருமையாக செய்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் ஹரி மகாதேவன். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாராட்டுக்கள்.

#New film#Tamil movie#ungal cinema#yellowmoviemovie review
Comments (0)
Add Comment