சந்தோஷ் டி குருவிலா, பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் தயாரிப்பில் இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு , செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பல்டி’
நாயகன் ஷேன் நிகம் மற்றும் சாந்தனு உள்ளிட்ட இவர்களது விளையாட்டு குழு கபடியில் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் விளையாடும் அனைத்து போட்டிகளும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுகிறார்கள்.
இதே வேளையில் கந்துவட்டி தொழில் செய்து வரும் செல்வராகவன் பொற்றாமரை எனும் கபடி குழுவையும் வைத்திருக்கிறார்.
கோலி சோடா தொழில் செய்து அல்போன்ஸ் புத்திரன் இவர் ஒரு கபடி குழுவை நடத்தி வருகிறார். இவர்களுக்கிடையே கடும் போட்டி நடக்கிறது.
இந்நிலையில் நாயகன் ஷேன் நிகம் நாயகி ப்ரீத்தி அஸ்ரானியை பார்த்தும் காதல் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் ஷேன் நிகான் உள்ளிட்ட நண்பர்கள் பணத்திற்காக செல்வராகவன் கபடி குழுவில் சேர்ந்து விளையாடி அல்போன்ஸ் புத்திரன் கபடி குழுவை தோற்கடிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் செல்வராகவன் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவை தன் கந்து வட்டி தொழிலில் ஈடுப்படுத்த அதனால் நண்பர்கள் இருவரும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர் .
இந்நேரத்தில் தன் காதலி நாயகி ப்ரீத்தி அஸ்ரானி அவரது அண்ணன் வாங்கிய கடனுக்காக செல்வராகவனிடம் அவமானப்படும் போது ஷேன் நிகம் செல்வராகவனை அடித்துவிட்டு அங்கிருந்து ஒடி விடுகிறார் .
நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிய இருவரையும் செல்வராகவன் தன் அடியாட்களுடன் அவர்களை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார் .
முடிவில் செல்வராகவனின் கொலை வெறியில் இருந்து ஷேன் நிகமும், சாந்தனுவும் உயிர் பிழைத்தார்களா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘பல்டி’
நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம் இயல்பான நடிப்பில் காதல், ஆக்க்ஷன் ,எமோஷனல் என அனைத்திலும் இயல்பான நடிப்பிலும் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனுவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளர்கள் இருவருமே அதிரடி ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார்கள்
நாயகியாக வரும் ப்ரீத்தி அழகாக வந்து அளவான நடிப்பால் கவர்கிறார்.
வில்லன்களாக கந்து வட்டி தொழில் செய்பவராக வரும் செல்வராகவன் கோலி நிறுவனம் நடத்தி வரும் அல்போன்ஸ் புத்திரன், ஜிமாவாக வரும் பூர்ணிமா அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையும் ,அலெக்ஸ் . புலிக்கல் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
கபடி விளையாட்டை மைய கருவாக வைத்து கந்து வட்டி தாதாகளின் இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில இளைஞர்களின் வாழ்க்கை என அதிரடி ஆக்ஷனுடன் சேர்ந்த திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்