‘யோலோ’ – விமர்சனம்

எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் இயக்குனர் எஸ் .சாம் இயக்கத்தில் தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார் ,படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன் ,சுவாதி, திவாகர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘யோலோ’

நாயகன் தேவ் யோலோ’ என்று ஒரு யூடியூப் சேனல் முலம் பொதுமக்களை ப்ராங்க் வீடியோ செயது, அதை யூ டியூப்பில் ஒளிபரப்பி செய்து வருகிறார். படவா கோபி மகளான நாயகி தேவிகாவை பெண் பார்ப்தற்காக விஜே நிக்கி அக்கா மற்றும் மாமாவை அழைத்து செல்கிறார்.

நிக்கியின் அக்கா, தேவிகாவை பார்த்து உனக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூற தேவிகா உட்பட அனைவருக்குமே அதிர்ச்சி அடைகிறார்கள். தேவிகா நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று கூற, உனது கணவர் தேவ் என்றும், உங்களை இருவரையும் ஒன்றாக பார்த்திருப்பதாகவும் கூறிவிடுகிறார் நிக்கியின் அக்கா

ஒரு கட்டத்தில் தேவிகாவுக்கும் தேவுக்கும் திருமணம் ஆனதற்கான பதிவு ஆதாரம் இருப்பது தெரிகிறது.

தனக்கு தெரியாமல் நடந்த திருமணத்தின் தேவிகா உண்மையை அறிய தேவிகா முயற்சி செய்கிறார்.
இறுதியில் நாயகன் தேவ், நாயகி தேவிகா இருவருக்கும் நடந்த திருமணம் உண்மையா ?
என்ன காரணத்தினால் இவர்களுக்கு திருமணம் நடந்தது ? என்பதே ‘யோலோ’ படத்தின் மீதிக்கதை.
இயல்பான நடிப்பில் அறிமுக நாயகனாக நடித்திருக்கும் தேவ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், காமெடி , நடனம் , ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும் கதிர் ஜோடி நடிப்பு ரசிக்க முடிகிறது.
கதாநாயகி வரும் தேவிகா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அப்பாவாக வரும் படவா கோபி நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது.

விஜே நிக்கி ,ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சகிஷ்னா சேவியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சூராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக பயணிக்கிறது.

விஜே நிக்கி ஆரம்பம் முதல் இறுதிவரை படம் பார்ப்பவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறார் . எது வருமோ அதை மட்டும் செய்தால் நல்ல இருக்கும் விஜே நிக்கி
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
கதையை யாரும் யூகிக்க முடியாதபடி பேய் படமா,காதல் படமா , சஸ்பென்ஸ் படமா என குழப்பமான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் .சாம்
ரேட்டிங் : 2 / 5
Comments (0)
Add Comment