M/s. JDS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த்,பிந்து மாதவி தேஜு அஸ்வினி,லிங்கா , போஸ் வெங்கட், சோனியா,ஷாஜி,ரெடின் கிங்ஸ்லி, வேட்டை முத்துக்குமார், ஹரிப்பிரியா, சந்திரிகா ரவி ,ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிளாக் மெயில்’
கோயம்புத்தூரில் மருந்துகளை டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வருகிறார் நாயகன் ஜி வி பிரகாஷ் இவரது காதலி தேஜு அஸ்வினி மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வர இருவரும் காதலிக்கிறார்கள்.
ஒருநாள் முத்துக்குமார் பார்சல் ஒன்றை ஜி வி பிரகாஷிடம் கொடுத்து உடனே டெலிவரி செய்யுமாறு கூறுகிறார். அந்த பார்சலை வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல திடீர் என பார்சலுடன் வாகனம் காணாமல் போகிறது.
இதனையடுத்து முத்துக்குமார் ஜி.வி.யின் காதலி தேஜு அஸ்வினியை கடத்திச் செல்கிறார். காணாமல் போன பார்சல் அல்லது 50 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு தேஜுவை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார்.
மறுபக்கம் பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் இவரது மனைவி பிந்துமாதவி இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பார்சலை தேடி ஜி.வி பல இடங்களில் அழைக்கிறார். ஒரு கட்டத்தில் லிங்காவை ஜி.வி சந்திக்க ஸ்ரீகாந்த் மகளை கடத்தி வந்தால் 50 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்.
முடிவில் ஜி வி பிரகாஷ் குமார் நண்பன் ரமேஷ் திலக்குடன் சேர்ந்து குழந்தையை கடத்த முயற்சி செய்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக வரும் தேஜு அஸ்வினி,தொழிலதிபராக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த் மனைவியாக நடித்திருக்கும் பிந்துமாதவி , வில்லனாக வரும் லிங்கா,முத்துக்குமார், நண்பராக வரும் ரமேஷ் திலக் அவரது மனைவியாக வரும் ஹரிப்பிரியா, ஷாஜி,ரெடின் கிங்லி, ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் சந்திரிகா ரவி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.