வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, குமாரவேல், ஜி எம் குமார், பாலசரவணன், வினோத்சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கெளதம் சுந்தர்ராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘குமார சம்பவம்’
தாத்தா ஜி எம் குமார், அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வரும் நாயகன் குமரன் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறி வருகிறார்.இவரது கதையை திரைப்படமாக எடுக்க யாரும் முன்வரவில்லை
இதே சமயம் சமூக போராளியான குமாரவேல் குமரனுடைய வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறார். குமாரவேல் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார். இதனால் பல பிரச்சனைகளை நாயகன் குமரன் சந்தித்து வருகிறார்.
குமரனுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் தானே படத்தை தயாரிக்க நினைத்து தாத்தாவின் பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார். அதோடு அந்த சொத்தில் ஒரு பங்கை குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று தாத்தா உயில் எழுதியும் வைத்திருக்கிறார்.
இதனால் குமரனுக்கு கோபம் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இறுதியில் குமரவேல் மரணம் கொலையா? தற்கொலையா? நாயகன் குமரன் படத்தை இயக்கினாரா? இல்லையா? என்பதே ‘குமார சம்பவம்’ படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரை தொலைக்காட்சியின் பிரபலமான’ பாண்டியன் ஸ்டோர் ‘ சீரியலில் கதாநாயகன் குமரன் இந்த திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.காதல்,காமெடி, செண்டிமெண்ட் , எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார். சமூக போராளியாக நடித்திருக்கும் குமரவேல் அழுத்தமான கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பின் கவனம் பெறுகிறார்.
தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார், சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் வினோத் சாகர் வரும் காட்சிகள் காமெடியில் திரையரங்கம் அதிர்கிறது மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.
அச்சுராஜா மணியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறது.
ஒரு கொலையை மைய கருவாக வைத்து சஸ்பென்ஸ் கலந்து முழுநீள காமெடி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் படத்தின் முதல்பாதி மெதுவாக செல்ல இரண்டாம் பாதி விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்
மதிப்பீடு : 3.5 / 5