சின்னத்தம்பி புரொடக்சன், மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் அனிஷ் அஷ்ராப் இயக்கத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, கிங்க்ஸ்லி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சென்னை பைல்ஸ் ‘முதல் பக்கம்’
மதுரையில் குற்றப் புலனாய்வு தொடர்பான நாவலை எழுதியிருப்பவர் ஜீவன் குமார். இவருடைய மகன்தான் நாயகன் வெற்றி இவருடைய தந்தையை பற்றி ‘மனிதம்’ பத்திரிகையில் தொடராக எழுத நினைக்கிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்
இதனையடுத்து வெற்றி தந்தையைப் பற்றி தகவல்களை கூறுவதற்காக, சென்னை வருகிறார் அங்கு பத்திரிகை ஆசிரியராக இருக்கும் ஷில்பாவை சந்திக்கிறார்.
அதே சமயம், இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையாவை எதிர்பாராத விதமாக வெற்றி சந்திக்க இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட, ஒரு கொலை குற்றத்தை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வெற்றி உதவி செய்கிறார்.
அப்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி அதை எப்படி கண்டுபிடிக்கிறார்?
இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன?, என்பதை விவரிக்கும் படம்தான் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’.
பத்திரிகை ஆசிரியராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத். வில்லனாக நடித்திருக்கும் மகேஷ் தாஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.