‘கிங்டம்’ – விமர்சனம்

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ்,ரோகினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கிங்டம்’

ஆந்திராவை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான நாயகன் விஜய் தேவரகொண்டாவின் அண்ணன்  சத்யதேவ் சிறுவயதில் தன் தாய் ரோஹிணியை அடிக்கும் குடிகார தந்தையை கொலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடி விடுகிறார் அண்ணன்  சத்யதேவ்,  

தன் அண்ணனை சிறு வயதில் இருந்தே  தேடி  வரும் நாயகன் விஜய் தேவரகொண்டா போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்க்கிறார்.
இந்நிலையில் இலங்கையில் பழங்குடி இனத்திற்கு தலைவராக இருக்கும் அண்ணன் சத்யதேவ்  சட்ட விரோதமான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்.  
விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் பற்றிய தகவல் ஒன்றை அவருக்கு தெரிவிக்கும் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி அண்ணனை மீட்க வேண்டும் என்றால், இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் மாஃபியா கூட்டத்திற்குள் ரகசிய உளவாளியாக நுழைய வேண்டும் என்றும், அது மிகவும் ஆபத்தான பணி என்றும் கூறுகிறார்.
இதற்காக அண்ணன் சத்யதேவை மீட்க  ரகசிய உளவாளியாக இலங்கைக்கு   செல்கிறார் விஜய் தேவரகொண்டா.
முடிவில் இலங்கைக்கு   செல்லும் விஜய் தேவரகொண்டா. தன் அண்ணனை மீட்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம் தான் ‘கிங்டம்’.
சூரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்க்ஷன் நாயகன் விஜய் தேவரகொண்டா  கான்ஸ்டபிளாக இயல்பான  நடிப்பிலும் . காதல்,  அதிரடி ஆக்க்ஷன் , செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீபோர்ஸ்  கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் .

அண்ணனாக நடித்திருக்கும்  சத்யதேவ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 

முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மனிஷ் சவுத்ரி, பழங்குடி இன மக்களின் குருவாக நடித்திருக்கும் ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியாவாக நடித்திருக்கும் பாபுராஜ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் . 

அனிருத்தின் இசையும்  , ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் மற்றும் ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவும்   படத்திற்கு மிகப்பெரிய பலம், 

அண்ணனை தேடும் போலீஸ் கான்ஸ்டபிள் கதையை மையமாக வைத்து  விறு விறுப்பான திரைக்கதையில் இலங்கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பழங்குடி இன மக்கள், அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கூட்டம்  என அதிரடி ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் கௌதம் தின்னனுரி.
 

ரேட்டிங் – 3 .5 / 5

Comments (0)
Add Comment