தேசிய அளவில் பேசப்பட்ட  மாண்டேலா திரைப்படம் 5ஆம் ஆண்டு நினைவாக…

இன்றுக்கு மாண்டேலா ரிலீஸாகி 5 ஆண்டுகள் ஆகுது. தேசிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம்.
ஒரு நடிகனாக எனது வாழ்க்கையில முக்கியமான திருப்புமுனையாக இருந்த படம் இது. இந்த மண்டேலா சிரிப்புகளுக்குள் சமூக சிந்தனையையும், உண்மையையும் சொல்லித்தந்த மாண்டேலா, மக்கள் இதயத்தில் இருந்து மகிழ்ச்சியோடு ஓடிக்கிட்டே இருக்கு.

இதுக்கு காரணமான என் பிரியமான தயாரிப்பாளர் #YNOT சசிகாந்த் அவர்களுக்கும், பாலாஜி மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தம்பி மடோன் அஷ்வின் உன் எழுத்தும், இயக்கமும் மேலும் உச்சத்தை தொட உன்னை மனமார வாழ்த்துகிறேன்.
என்னோட அன்பு டீம்: விது அய்யன்னா
– அழகான ஒளிப்பதிவு,
எடிட்டர் பிலோமினா ராஜ், இசை பாரத் ஷங்கர், சக நடிகர்களான ஷீலா, கண்ணா ரவி, சங்கிலி முருகன், ஜி எம் சுந்தர் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் எல்லாம் இந்தப் படத்தை இன்னும் உயிரோட்டமா வைத்திருக்கு.

மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவில் இருக்கும் இந்தச் சிறந்த படத்தில் ஒரு பங்கு வகித்ததை நெஞ்சளவில் கொண்டாடுகிறேன்.

– யோகி பாபு

Comments (0)
Add Comment