தன்னை உணர்வதற்காக 100க்கும் மேற்பட்ட காடுகள் மற்றும் மலைகள் வழியாக பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெற்ற அனுபவத்திலிருந்து தான் இந்த தியானத்தைக் கொடுக்கிறோம். வேறு எந்த புற நூல்களிலிருந்தோ, சித்தர் பாடல்களிலிருந்தோ எதுவும் பகிறப்படவில்லை.
ஆன்மா அறுங்கோணச் சக்கரத்தின் நோக்கம்: சுவாசப்புரட்சி
1. சுவாசத்தைக் கவனித்தல்: குறுக்கீடு அல்லது கவனச்சிதறல் இல்லாமல் சுவாசத்தைக் கவனிப்பது
2. எண்ணத்தை ஒருநிலைப்படுத்துவது: உள் அமைதி மற்றும் சமநிலை நிலையை அடைதல்.
3. தன்னை உணர்தல்: தனி மனிதன் தன் நிஜத்தை அறிதல்
4. வீடு தோறும் தவம்: அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக தியானப் பயிற்சியை மேற்கொள்ளுதல்
நாங்கள் தனிப்பட்ட முறையில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயணித்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் மற்றும் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை நடத்தியிருக்கிறோம்.
நமது தியானத்திற்கு கட்டணம் கிடையாது. அறக்கட்டளைகள், அமைப்புகள், பின்தொடர்பவர்கள் அல்லது பக்தர் குழுக்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதில்லை.
தியான அமர்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு 2 அல்லது 3 மாணவர்களே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள், தியானத்திற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். தியானம் மட்டுமே அவர்களுக்கு செயல் வடிவமாக இருக்கிறது. 4 நபர்கள் உதவி 400 நபர்கள் பயன் பெறுவதே நம் இலக்கு.
“ஆன்ம அறுங்கோணச் சக்கரத்தின் குரல்” என்ற இரண்டு புத்தகங்கள் எங்கள் வலைத்தளத்தில் கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. குருநாதர் மற்றும் ஆன்ம அறுங்கோணச் சக்கரம் பற்றிய முழு செயல் வடிவமும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
.
இரு சுவாசமும் பயிற்சி. ஒரு சுவாசமாக மாறுவது படைப்பு. 71000 நாடிகளும் விழித்திருப்பது பேரனுபவம். இதுவே தியானத்திற்கு உபதேசம்.
நல்ல தவம் செய்தால் இடு காட்டில் வேலை இல்லை.