ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் ப்ருத்வி போலவரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி, மோக்ஷா , பிரமோதினி , சுனில் ஹரீஸ் உத்தமன், சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. பிரித்விராஜ். ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ராமம் ராகவம்’
கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி சமுத்திரக்கனி. இவரது மகன் தன்ராஜ் கொரனானி பள்ளிப்பருவத்திலேயே மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி அனைத்து கெட்டபழக்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்
இதனால் தந்தைக்கும் மகனுக்கும் எப்போதுமே மோதல் ஏற்படுகிறது.
சமுத்திரக்கனி மகனின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். அதைப் புரிந்து கொள்ளாத மகன் தன்ராஜ் கொரனானி தந்தையை எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறார் .
சமுத்திரக்கனி தன் மகனை எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்
இதனையடுத்து புதிய தொழில் தொடங்குவதாக கூறி சமுத்திரகனியிடம் ஐந்து லட்சம் கேட்டு வாங்கும் தன்ராஜ் கொரனானிஅதை தொழில் தொடங்காமல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்து விடுகிறார். இதனால் சமுத்திரக்கனி கோபமாக கண்டிப்பது அவருக்கு பிடிக்காமல் அப்பாவையே கொலை செய்ய திட்டமிடுகிறார்.
இறுதியில் நாயகன் தன்ராஜ் கொரனானி சமுத்திரக்கனியை கொலை செய்ய போட்ட திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘ராமம் ராகவம்’
நேர்மையான அரசாங்க அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி இயல்பான நடிப்பில் மகன் மீது அதிக பாசம் வைத்திருப்பவராகவும் தவறு செய்யும் போது அதை தட்டி கேட்பவராகவும் பாசத்துடன் சேர்ந்த கண்டிப்பான தந்தையாக இவரது நடிப்பு சிறப்பாக உள்ளது.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் பிரமோதினி மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்ஷா,சுனில் ஹரீஸ் உத்தமன்,சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. என நடித்த நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தந்தை – மகன் உறவு குறித்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இன்றைய சமூகத்தி்ற்கு ஏற்ற வகையில் பாராட்டும்படி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தன்ராஜ் கொரனானி
ரேட்டிங் – 3 . 25 / 5