வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழாவின் பரிசளிப்பு விழா, 2025
வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது.
ஜனவரி 5 , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த
பொருளாதார நலிவுற்ற சுமார் 7000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கு பெற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
பேரணியை
திருமிகு. ச. அண்ணாதுரை ஐஏஎஸ் அவர்களும்
வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் திருமிகு. எம்.வீ.எம். வேல்மோகன் அவர்களும்
தொடக்கி வைத்தனர்.
கலைஞர்களின் பேரணி
சென்னை, முகப்பேர் மேற்குப் பகுதியில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் தொடங்கி
முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வரைக்கும் இருந்தது.
சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள்
உரிய ஒப்பனைகளோடு கலைஞர்கள் வெளிப்படுத்திய பாரம்பரியக் கலைகளைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
முகப்பேர், வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்களின் திருகரங்களால்
58 வயதிற்கு மேற்பட்ட
நலிவுற்ற 100 மூத்தக் கலைஞர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் பத்தாயிரம் விதம் பணமுடிப்பு வழங்கப்பட்டது
நியூஸ் 7 முதன்மை ஆசிரியர் திருமிகு கார்த்திகைச்செல்வன் மற்றும்
நடிகர் ரமேஷ் திலக் ஆகியோரின் திருக்கரங்களால்
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட
40 கலைக்குழுக்களுக்கு ஒவ்வொரு கலைக்குழுவுக்கும்
ரூபாய் 10,000 வீதம் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
விஜிபி குழுமத் தலைவர் திருமிகு சந்தோஷம் மற்றும் நடிகரும் இயக்குநருமான
திருமிகு. போஸ் வெங்கட் ஆகியோரின் திருக்கரங்களால்
மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பண முடிப்பும்
நாட்டுப்புற வீரதீர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்து இருந்தது.
இந்த விழா, நாட்டுப்புறக் கலைகளின் அழகையும் அரிய பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறவும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.
திறமையான கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அங்கீகாரம் பெறவும் முக்கிய தளமாகவும்
விழா அமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்
ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த விழா ஒரு கலைகளின் வெற்றித் திருவிழாவாக அமைந்திருந்தது….